• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆஃபீஸில் ரெக்கரிங் டெபாசிட் செய்ய வட்டி விகிதம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

போஸ்ட் ஆஃபீஸில் ரெக்கரிங் டெபாசிட் செய்ய வட்டி விகிதம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு

Post Office RD Interest Rates 2021 : போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களை மிகவும் குறைந்த பணத்தில் சேமிப்பைத் தொடங்கலாம். தபால் நிலையத்தில் நீங்கள் தொடங்கும் ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குப் பிறகும் கணக்கை நீடித்துக் கொள்ளலாம்.

  • Share this:
    சிறு சேமிப்பு திட்டங்களை போலவே நீண்ட கால முதலீடு திட்டங்களும் போஸ்ட் ஆஃபீஸில் இருக்கிறது. வங்கிகளில் டெபாசிட் கணக்கு தொடங்க வேண்டும் என்றால், நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் சூழலில், கிராமபுற மக்களுக்கு போஸ்ட் ஆஃபீஸ்களை அணுகுவது மிகவும் எளிதாக இருக்கிறது. அவர்கள் சேமிக்கும் தொகைக்கு வங்கிகளில் கிடைக்கும் வட்டி விகிதங்களைப் போல் போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் திட்டங்களும் கொடுக்கின்றன.

    போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் :

    போஸட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களை மிகவும் குறைந்த பணத்தில் சேமிப்பைத் தொடங்கலாம். தபால் நிலையத்தில் நீங்கள் தொடங்கும் ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குப் பிறகும் கணக்கை நீடித்துக் கொள்ளலாம். இந்த முதலீட்டு தொகைகளுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயிக்கப்படுகிறது. கூட்டு வட்டியின் கணக்கீட்டு அடிப்படையில் உங்களுக்கான வட்டித் தொகை கிடைக்கும்

    ரெக்கரிங் டெபாசிட் வட்டி :

    தற்போது ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நீங்கள் தனி கணக்காகவோ அல்லது இணைப்பு கணக்காகவோ தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை பெயரிலும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் தொடங்கி நீங்கள் முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை.சேமிப்புக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றும் வசதியும் இதில் உள்ளது. ஒரு வருடம் கழித்து உங்களது டெபாசிட் தொகையில் 50 சதவீதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

    சேமிப்பு தேதிகள் :

    ரெக்கரிங் டெபாசிட் கணைக்கைத் தொடங்கும் ஒருவர் 5 ஆண்டுகளில் 60 டெபாசிட்டுகளை செய்ய வேண்டும். அதாவது, மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். முதல் தேதியில் இருந்து 15 ஆம் தேதிக்குள் டெபாசிட் கணக்கை ஓபன் செய்திருந்தால், அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும். 15 ஆம் தேதிக்கு பிறகு கணக்கை தொடங்கியிருந்தால் 16 ஆம் தேதியில் இருந்து அம்மாத இறுதிக்குள் தொகையை செலுத்த வேண்டும்.

    ALSO READ |  SBI வாடிக்கையாளர்களே ஜாக்கிரதை.. இனிமே உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஏன் தெரியுமா?

    அபராதம் :

    போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கு அபராதம் உண்டு. ரெக்கரிங் வைத்திருப்பவர் எல்லா தவணைகளையும் முறையாக செலுத்துவதற்கான காலச் சூழல் இருக்காது. சில தவணைகள் கட்ட முடியாமல் போகலாம் அல்லது தாமதமாக கட்ட நேரலாம். ரெக்கரிங் டெபாசிட் விதிமுறைகளின்படி, அதிகபட்சம் 4 தவணைகள் செலுத்தப்படவில்லை என்றால் கணக்கு மூடப்படும். அடுத்ததாக இரண்டு மாதங்கள் கழித்தே மீண்டும் கணக்கை ஆக்டிவேட் செய்ய முடியும். அப்போது, கட்டத் தவறிய தவணைத் தொகைகளுக்கு 100 ரூபாய்க்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் அபராதம் செலுத்த வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கணக்கு மூடப்பட்டாலும் மீண்டும் தவணை மற்றும் அபராத தொகையை செலுத்தி கணத்தை திறந்து கொள்ளலாம்.

    சலுகை :

    தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அஞ்சல் ரெக்கரிங் டெபாசிட் வழங்குகிறது. அதன்படி, மாதாந்திர ப்ரீமியத்தில் 10 விழுக்காடு தொகை தள்ளுபடி கிடைக்கும். ஒருவர் மாதம் 1000 ரூபாய் செலுத்துகிறார் என்றால், 6 மாதங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். 6 தவணைகளாக செலுத்த வேண்டிய தொகையை முன்கூட்டியே செலுத்தும்போது 5,900 மட்டும் செலுத்தினால் போதும்.

    ALSO READ |  கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை எங்கு கொடுக்க வேண்டும்? கொடுத்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

    100 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். ஒரு வருடத்திற்கு மொத்த தொகையை டெபாசிட் செய்தால், அவருக்கு மாதாந்திர பிரீமியத்தின் 40 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். இதனால், ஒரு வருடத்திற்கான மொத்த வைப்புத்தொகை ரூ.12,000 க்கு பதிலாக ரூ.11,600 ஆக இருக்கும். பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், குறிப்பிட்ட தொகையை இதன்மூலம் சேமிக்க வழிவகை உள்ளது.

    பிக்ஸ்டு டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்

    நிலையான வைப்புத் தொகைக்கும், ரெக்கரிங் டெபாசிட்டுக்கும் வித்தியாசம் உள்ளது. பிக்ஸ்டு டெபாசிட் என்பது குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலத்துக்கு நிலையான வைப்புத் தொகையாக முதலீடு செய்வதாகும். ரெக்கரிங் டெபாசிட் என்பது குறிப்பிட்ட தொகையை தவணை முறையில் மாதாமாதம் செலுத்துவதாகும். இரண்டுக்கும் வட்டி வகிதமும் வித்தியாசம். நிலையான வைப்புத் தொகைக்கு கூடுதல் வட்டியும், ரெக்கரிங் டெபாசிட்டுக்கு ஒப்பீட்டளவில் குறைவான வட்டியும் கிடைக்கும்.

    போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் சலுகை :

    பொதுவாகவே பிக்ஸ்டு மற்றும் ரெக்கரிங் டெபாசிட்டுகளுக்கு அரசு சார்பில் சில வரிச்சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. போஸ்ட் ஆஃபீஸில் செய்யப்படும் ரெக்கரிங் டெபாசிட்டுக்கு வரிச்சலுகை என்பது ஜீரோவாகும். அதாவது, ஒரு விழுக்காடு கூட வரியே கிடையாது. வங்கிகள் கொடுக்கும் சிறப்புச் சலுகைகள்போல் போஸ்ட் ஆபிஸ் சேமிப்புகளுக்கும் சிறப்பு சலுகைகள் ஏராளமாக உள்ளன. முதலீட்டு தொகை குறித்து அச்சப்பட தேவையில்லை.

    ALSO READ |  தொடர்ச்சியான வைப்புநிதிகளுக்கு வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதம் வழங்குகின்றன? முழு விவரம்!

    லட்சாதிபதியாக வாய்ப்புள்ளதா?

    சிறிய தொகையை தான் முதலீடு செய்கிறோம். இதனால் லட்சாதிபதியாக வாய்ப்புள்ளதா? என சிலர் யோசிக்கலாம். மேம்போக்காக பார்க்கும் சிலருக்கு இதில் லட்சாதிபதியாகும் வாய்ப்பு இருக்காது என்ற முடிவுகவே வந்துவிடுவார்கள். அதாவது, நீண்ட காலம் சேமிக்க வேண்டுமா? என்கிற ரீதியில் அவர்களின் அணுகுமுறை இருக்கும். உண்மையில், யாரோ ஒருவரிடம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை முதலீடு செய்து ஏமாறுவதைக் காட்டிலும்.

    போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ரெக்கரிங் டெபாட்சிட் போன்ற திட்டங்கள் சிறந்தது. முதலீடு செய்யும் தொகைக்கு முழு உத்திரவாதம் இருக்கிறது. பயப்படத்தேவையில்லை. சரி நீங்கள் லட்சாதிபதியாகுவது எப்படி என யோசிக்கிறீர்களா?. நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் தொடர்ச்சியாக முதலீடு செய்தால் உங்களால் லட்சாதிபதி ஆகிவிட முடியும். தற்போது கிடைக்கும் 5.8 சதவிகித வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் 10,000 ரூபாயை தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.

    ALSO READ |  தொடர் வைப்பு நிதிக்கு வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் திட்டங்கள்!

    உங்கள் பணம் முதிர்வு காலத்தில் ரூ.6,96,967 ஆக அதிகரிக்கும். 5 ஆண்டுகளில் மொத்த வைப்புத்தொகை ரூ.6 லட்சமாகவும், வட்டித் தொகை ரூ.99,967 ஆகவும் இருக்கும். இதனால், முதிர்வு தொகை சுமார் ரூ.7 லட்சம் கிடைக்கும். 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாயை சம்பாதிக்கிறீர்கள். சிலருக்கு இந்த தொகை பெரியதாக இருக்கிறது என நினைத்தால், சிறிய தொகையில் முதலீடு செய்யுங்கள். அதற்கேற்ற வருமானம் கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: