• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு வங்கிகள் நிர்ணயித்துள்ள வரம்புகள் என்ன!

சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு வங்கிகள் நிர்ணயித்துள்ள வரம்புகள் என்ன!

சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு

Savings Account : பல வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன. அவை என்னவென்று இங்கு தெரிந்து கொள்வோம். எந்த வகையான சேமிப்பு கணக்குகளில் பணப் பரிவர்த்தனைகளின் வரம்பு என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

  • Share this:
    டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில், வங்கி பரிவர்த்தனைகள் என்பதை தவிர்க்க முடியாது. ​​ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும், தனியார், அரசு அல்லது கூட்டுறவு வங்கியில் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு இருப்பது அவசியம். நாட்டில் நிலவும் நிதி முறைகேடுகள், கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றைத் தடுக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நிதி பரிவர்த்தனையிலும் வெளிப்படைத்தன்மையை பேணுவது அவசியம், இல்லையெனில் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

    நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அதேபோல், தினசரி, மாதாந்திர பணம் எடுப்பதற்கும், நிதி பரிவர்த்தனைகளுக்கு, பண பரிவர்த்தனைக்கும், சில உச்ச வரம்புகளை அரசு நிர்ணயித்துள்ளது.

    ஏடிஎம்கள் மூலம் பணம் எடுப்பதற்கும் வங்கிக் கிளைகளில் பணம் எடுப்பதற்கும் வெவ்வேறு வரம்புகள் உள்ளன. சேமிப்புக் கணக்கின் நோக்கம் சேமிப்பை ஊக்குவிப்பதாகும். எனவே பான் கார்டைச் சமர்ப்பித்து இந்தக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இருப்பினும், இந்தக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதில் சில வரம்புகள் உள்ளன. அதே போல, ரொக்கப் பரிவர்த்தனைக்கும் சில விதிகள் பின்பற்றப்பட வேண்டும். பண பரிவர்த்தனைக்கான வரம்பு பூர்த்தி செய்யப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைக்கு 60% வரை வரி விதிக்கப்படலாம்.

    ALSO READ | மியூச்சுவல் ஃபண்டில் தொடக்கத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? முழு விவரம்!

    யுடிலிட்டி பில் மற்றும் கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவது முதல் சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்துவது வரை, பணத்திற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பல விதமான நிதி பரிவர்த்தனைகள் உள்ளன. பல்வேறு விதமான பணப்பரிவர்த்தனைகளுக்காக, வங்கிகள் பல்வேறு வங்கிக் கணக்குகளை வழங்குகின்றன. சேமிப்புக் கணக்கு, சம்பளம் பெறும் வங்கிக் கணக்கு, வைப்பு நிதி கணக்கு, நடப்புக் கணக்கு என்று பலரின் தேவைகளுக்கும் ஏற்றவாறு வங்கிக் கணக்குகள் உள்ளன.

    அதில், சேமிப்புக் கணக்கு என்பது தனிநபர்கள் பயன்படுத்தக் கூடியது கணக்குகளாகும். வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை மற்றும் வங்கியைப் பொறுத்து 2.70 சதவீதம் முதல் 5.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன. மற்றொரு அம்சம் என்னவென்றால், ஒரு தனிநபரின் சேமிப்புக் கணக்கை பராமரிக்க தேவைப்படும் குறைந்தபட்ச தொகை, நடப்பு கணக்கை விட குறைவாகவே இருக்கும் உள்ளது. இது வங்கிகளைப் பொறுத்து மாறுபடும்.

    பல வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன. அவை என்னவென்று இங்கு தெரிந்து கொள்வோம். எந்த வகையான சேமிப்பு கணக்குகளில் பணப் பரிவர்த்தனைகளின் வரம்பு என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.,

    1. சேமிப்பு கணக்கு :

    சாதரணமான சேமிப்பு கணக்குகளைத் திறப்பதற்கு சில அடிப்படை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. வழக்கமான சேமிப்புக் கணக்குகளில் நிலையான வைப்புத்தொகைகள் காணப்படுவதில்லை. இத்தகைய வழக்கமான சேமிப்புக் கணக்குகள் மிகவும் பாதுகாப்பான வீட்டிற்குச் சமமானது.

    2. சம்பள அடிப்படையிலான சேமிப்பு கணக்கு :

    சம்பள அடிப்படையிலான சேமிப்பு கணக்குகள் என்பது நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில் வங்கிகளால் திறக்கப்படும் கணக்குகள் ஆகும். இத்தகைய கணக்குகள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. வங்கி, நிறுவனத்தின் கணக்கிலிருந்து பணத்தைப் பெற்று, உரிய தேதி வரும்போது பணத்தை செலுத்துகிறது.

    ALSO READ |  மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்றால் என்ன? இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

    அத்தகைய சம்பளக் கணக்குகளை ஆரம்பிக்க குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.இவை எல்லாம், ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டாக வங்கிகளால் வழங்கப்படுகிறது. இதுபோன்ற சம்பளக் கணக்குகளில் தொடர்ந்து மூன்று மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என்றால், அந்தக் கணக்கு பொதுவான சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டுவிடும்.

    3. மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு :

    பொதுவான சேமிப்புக் கணக்குகளைப் போலவே மூத்த குடிமக்களின் கணக்குகளும் செயல்படுகின்றன. ஆனால் இத்தகைய கணக்குகள் மூத்த குடிமக்களுக்கு மிக அதிக வட்டி விகிதங்களையும் வங்கிச் சலுகைகளையும் வழங்குகின்றன. இந்தக் கணக்குகள் மூத்த குடிமக்களின் சேமிப்புத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டு, ஓய்வூதியக் கணக்குகள் அல்லது ஓய்வூதிய நிதிகளில் இருந்து பணத்தை அனுப்பவும், அனைத்து நிதிகளையும் ஒரே வங்கிக் கணக்கின் கீழ் ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.

    4. மைனர் சேமிப்பு கணக்கு :

    இது 18 வயதுக்குட்பவர்களுக்கான வங்கி சேமிப்பு கணக்கு. இந்தக் கணக்கைத் திறக்க குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் தேவையில்லை. வங்கி வசதிகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் பற்றி குழந்தைகள் கற்றுக்கொள்ள மைனர் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன. குழந்தை 10 வயதை அடையும் வரை சட்டப்பூர்வ பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே அத்தகைய கணக்கைத் திறக்க முடியும். குழந்தைக்கு 18 வயதாகும்போது கணக்கு இப்போது வழக்கமான சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.

    5. ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு :

    ஜீரோ பேலன்ஸ் கணக்கு என்பது சேமிப்பு / நடப்புக் கணக்குகளின் கலவையாகும். இருப்பினும், கணக்கில் இருந்து எடுக்கக்கூடிய தொகைக்கு வரம்பு உள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குக் கீழே வங்கி இருப்புத்தொகை இருந்தாலும் அபராதம் விதிக்கப்படாது.

    சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் ரொக்கமாக எடுக்கும் வரம்பு விவரங்கள் :

    ஒவ்வொரு வங்கியின் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் சிறு சேமிப்புக் கணக்கு ஆகியவற்றிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் வேறுபட்டவை. நீங்கள் காசோலை, பணம் எடுக்கும் ஸ்லிப் அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுக்கிறீர்கள் என்றால், ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை வரம்பு உள்ளது. இந்த வரம்பு ஒவ்வொரு வங்கிக்கும் மாறும். ஏடிஎம் கார்டு மூலம் தினமும் ரூ.10,000 எடுக்கலாம்.

    ALSO READ |  நிகர சொத்து மதிப்பு (NAV) என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது? முழு விவரங்கள் இங்கே!

    உங்கள் வங்கியைத் தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மூன்று முறை இலவசமாக பணம் எடுக்கலாம். மற்றும் அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்படும். உங்களிடம் சிறு சேமிப்புக் கணக்கு இருந்தால், நீங்கள் வழக்கமாக ஒரு மாதத்திற்கு 8 முறை பணத்தை எடுக்கலாம். உங்கள் வங்கிக் கிளையிலிருந்து 4 முறையும், ஏடிஎம் இயந்திரத்தின் உதவியுடன் 4 முறையும் பணத்தை எடுக்கலாம் என்ற வரம்பு உள்ளது. சில வங்கிகளில் பணம் எடுப்பதற்கான வரம்புகள் பற்றிய விவரங்கள் இங்கே.,































    RBL வங்கி ரூ 50,000 முதல் ரூ 1.5 லட்சம்
    HDFC வங்கி ரூ 25,000 முதல் ரூ 1 லட்சம் வரை.
    ஆக்சிஸ் வங்கி 40,000 முதல் 3 லட்சம்
    கோடக் மஹிந்திரா வங்கி 40,000 முதல் 2.5 லட்சம்
    யெஸ் வங்கி 25,000 முதல் 1 லட்சம்
    லட்சுமி விலாஸ் வங்கி 10,000 முதல் 1 லட்சம்,
    இண்டஸ்லேண்ட் வங்கி 50,000 முதல் 5 லட்சம் வரை.

    இந்தியாவில் உள்ள பல்வேறு சேமிப்புக் கணக்கு வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் பணப் பரிமாற்றத்துக்கும் வரம்புகள் உள்ளன.

    ரொக்கம் அல்லாத பணப் பரிவர்த்தனைகளுக்கான வரம்பு :

    மேலே உள்ள குறிப்பிட்ட வரம்புகளை மீறிய பணப்பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையால் கண்காணிக்கப்படுகிறது. இந்த பரிவர்த்தனையின் போது நீங்கள் விதிகளை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வங்கி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கிறது. அத்தகைய பரிவர்த்தனைகளை ஆராய்ந்து, உங்கள் பழைய வருமான வரி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, அது பற்றிய தகவல்களை வருமான வரித்துறை உங்களிடம் கேட்கலாம்.

    ALSO READ |  மியூச்சுவல் பண்ட்ஸ் ஒரு பார்வை- எந்த விதமான முதலீட்டை தேர்ந்தெடுப்பது நல்லது?

    ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை வருமான வரித் துறைக்கு வங்கி தெரிவிக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில், உங்களிடம் வலுவான காரணம் அல்லது சரியான ஆவணங்கள் இல்லையென்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். வங்கிகளில் மட்டுமின்றி தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கலாம்.

    ALSO READ |  ஃபிக்சட் டெபாசிட் போல மியூச்சுவல் ஃபண்ட்கள் ஏன் நிலையான வட்டி விகிதத்தை வழங்குவதில்லை? காரணம் இதோ!

    அஞ்சலக சேமிப்புக் கணக்கு என்பது தபால் நிலையத்தில் தொடங்கக்கூடிய கணக்கு. பொதுவாக ஒரு வங்கி அனைத்து நகரங்களிலும் கிளைகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அணுக முடியாத பகுதிகளில் அமைந்துள்ள தொலைதூர நகரங்களில் கூட தபால் நிலையங்கள் உள்ளன. இந்தியக் குடியுரிமை பெற்ற ஒரு வயது முதிர்ந்த ஒருவர் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கை 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்களும் ஆரம்பிக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: