• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நிகர சொத்து மதிப்பு (NAV) என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது? முழு விவரங்கள் இங்கே!

நிகர சொத்து மதிப்பு (NAV) என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது? முழு விவரங்கள் இங்கே!

நிகர சொத்து மதிப்பு (NAV)

நிகர சொத்து மதிப்பு (NAV)

NAV என்பது US செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் (SEC) பதிவுசெய்யப்பட்ட நிதிகளின் பங்குகள் / யூனிட்களின் வர்த்தகத்தின் (முதலீடு அல்லது மீட்டெடுப்பு) விலையாகும்.

  • Share this:
    மியூச்சுவல் ஃபண்டின் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் செயல்திறன், அதன் நிகர சொத்து மதிப்பால் (NAV) குறிப்பிடப்படுகிறது. எளிமையாகச் சொன்னால், NAV என்பது மியூச்சுவல் ஃபண்டின் திட்டத்தில் உள்ள சந்தை மதிப்பு ஆகும். மியூச்சுவல் ஃபண்டுகள், முதலீட்டாளர்களால் திரட்டப்பட்ட பணத்தை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றன. பத்திரங்களின் சந்தை மதிப்பு தினமும் மாறுவதால், திட்டத்தின் சந்தை மதிப்பும் நாளுக்கு நாள் மாறுபடும்.

    மியூச்சுவல் ஃபண்ட் மீதான SEBI இன் விதிகளின்படி, ஒரு நாளின் வர்த்தகம் முடிவடைந்த பிறகு, அனைத்து மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களின் NAV-க்கள் அந்த வர்த்தக நாளின் முடிவில் அறிவிக்கப்படும். நிகர சொத்து மதிப்பு (NAV) என்பது ஒரு யூனிட்டின் நிகர மதிப்பைக் குறிக்கிறது மற்றும் யூனிட்டின் சொத்துகளின் மொத்த மதிப்பு அதன் கடன்களின் மொத்த மதிப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது.

    மியூச்சுவல் ஃபண்ட் அல்லது எக்ஸ்சேஞ்ச்-ட்ரேடட் ஃபண்ட் (ETF) விஷயத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் NAV என்பது ஒரு குறிப்பிட்ட தேதி அல்லது நேரத்தில் நிதியின் ஒரு பங்கு / யூனிட் விலையைக் குறிக்கிறது. NAV என்பது US செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் (SEC) பதிவுசெய்யப்பட்ட நிதிகளின் பங்குகள் / யூனிட்களின் வர்த்தகத்தின் (முதலீடு அல்லது மீட்டெடுப்பு) விலையாகும்.

    ALSO READ |  மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்வு செய்வது? அதிக லாபம் தரும் திட்டம் எது?

    நிகர சொத்து மதிப்பு பொதுவாக பரஸ்பர நிதிகள், ETFகள் அல்லது குறியீடுகளில் சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் தங்கள் சொந்த போர்ட்ஃபோலியோவில் உள்ள ஹோல்டிங்ஸைக் காண நிகர சொத்து மதிப்பையும் பயன்படுத்தலாம்.

    நிகர சொத்து மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?:

    கோட்பாட்டளவில், சொத்துக்கள் மற்றும் கடன்கள் கணக்கீடும் செய்யும் முறைகளோடு தொடர்புடைய எந்த நிதி தயாரிப்புகளுக்கும் NAV இருக்கும். நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பொறுத்தவரை, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையிலான வேறுபாடு தான் நிகர சொத்துக்கள் அல்லது நிகர மதிப்பு அல்லது நிறுவனத்தின் மூலதனம் என்று அழைக்கப்படுகிறது.

    ALSO READ | மியூச்சுவல் ஃபண்டில் தொடக்கத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? முழு விவரம்!

    NAV என்ற சொல் ஒரு நிதியின் மதிப்பீடு மற்றும் விலை என்ற அடிப்படையில் மிகவும் பயனுள்ள கருவி. இது முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்குகள் / யூனிட்களின் எண்ணிக்கையால் சொத்துக்கள் மற்றும் கடன்களுக்கு இடையிலான வேறுபாட்டைப் பிரிக்கிறது. ஒரு ஃபண்டின் NAV என்பதை இதன் மூலம் குறப்பிட்ட ஃபண்டின் "ஒவ்வொரு பங்கிற்குமான" மதிப்பைக் குறிக்கிறது, இது நிதியின் பங்குகளை மதிப்பிட்டு வர்த்தகம் செய்வதை மிகவும் எளிதாக்குகிறது.

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில் NAV என்பது வணிகத்தின் புத்தக மதிப்புக்கு சமமாக இருக்கும். வளரக்கூடிய நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. குறைந்த மதிப்பு மற்றும் அதிக மதிப்பு முதலீடுகள் பற்றிய தகவல்களைப் பெற NAV சந்தை மூலதனத்துடன் ஒப்பிடப்படுகிறது.

    ALSO READ | மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகள் - இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?

    ஒரு ஃபண்டின் நிகர சொத்து மதிப்பை கண்டறிய உதவும் ஃபார்முலா

    NAV = (சொத்துக்கள் - பொறுப்புகள்) / நிலுவையில் உள்ள பங்குகளின் மொத்த எண்ணிக்கை

    (NAV = (Assets - Liabilities) / Total number of outstanding shares))

    மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் நிகர சொத்து மதிப்பு

    மியூச்சுவல் ஃபண்டுகள் மதிப்பு சொத்துக்கள் மற்றும் கடன்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

    சொத்து (Assets) :

    மியூச்சுவல் ஃபண்டின் சொத்துப் பிரிவில் குறிப்பிட்ட நிதியின் முதலீடு, ரொக்கம், பிற பணத்துக்கு சமமான முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ஆகியவை அடங்கும். நாளின் முடிவில், ஒரு ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்பட்டுள்ள பல பத்திரங்களின் இறுதி விலையின் அடிப்படையில் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. இந்த நிதியில் திரவ சொத்துக்கள் மற்றும் பணம் மற்றும் வட்டி செலுத்துதல் மற்றும் டிவிடெண்ட் ஆகியவை அடங்கும்.

    ALSO READ |  பணத்தை சேமிப்பதை விட முதலீடு செய்வது எப்படி சிறப்பானது - முக்கிய வேறுபாடுகள் என்ன?

    கடன் (Liability) :

    நிகர சொத்து மதிப்பைக் கணக்கிடும் போது, மியூச்சுவல் ஃபண்டில் நிலுவைத் தொகைகள், செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் பிற கட்டணங்கள் ஆகியவை அடங்கும். இதிலே, வெளிநாட்டுக் கடனும் அடங்கும். உதாரணமாக, NRIகளுக்கான பங்குகள், வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகள் மற்றும் பிற தொகைகளும் இருக்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் ஊழியர்களின் சம்பளம், விநியோகச் செலவுகள், நிர்வாகச் செலவுகள் மற்றும் இதர செலவுகள் ஆகியவை அடங்கும்.

    எக்ஸ்சேன்ஜ் டிரேட் ஃபண்டுகளுக்கான NAV (NAV for ETF) :

    எக்ஸ்சேன்ஜ் டிரேடு ஃபண்டுகளுக்கான நிதிகள் மற்றும் பங்குகள் நெருக்கமான மற்றும் நிதி பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. குறிப்பாக, பங்கு சந்தை மதிப்பில் வர்த்தகம் செய்யப்படுகிறது. சந்தையில் ஆக்டிவ் ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வர்த்தகர்களுக்கு லாபகரமான வர்த்தக வாய்ப்புகளை இது அனுமதிக்கிறது. பரஸ்பர நிதிகளைப் போலவே, ETF நிதிகளும் அறிக்கையிடல் நோக்கங்களுக்காக சந்தை மதிப்பின் அடிப்படையில் NAVயைக் கணக்கிடுகின்றன.

    ALSO READ |  Loan : அவசரத்திற்கு 10 லட்சம் வரை இவ்வளவு ஈஸியா கிடைக்குமா?

    NAV அடிப்படையில் முதலீட்டு செயல்திறனை அளவிடுதல் :

    ஃபண்ட் முதலீட்டாளர்கள் பொதுவாக 2 தேதிகளுக்கு இடையே உள்ள NAV வேறுபாடுகளின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டின் செயல்திறனை மதிப்பிட முயற்சிப்பார்கள். மியூச்சுவல் ஃபண்டு செயல்திறனின் சிறந்த சாத்தியமான நடவடிக்கைகளில் ஒன்று, வருடாந்திரமாக நிதி ஈட்டும் மொத்த வருவாய் ஆகும்.

    இது முதலீட்டின் உண்மையான விகிதம் அல்லது கொடுக்கப்பட்ட மதிப்பீட்டு காலத்தில் முதலீடுகளின் தொகுப்பின் அடிப்படையில் உள்ள விகிதத்தைக் கணக்கிடுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்தையும் (CAGR) பார்க்கிறார்கள். இது வருமானம் மற்றும் லாபத்திற்கான அனைத்து இடைநிலை பேமெண்ட்களையும் வழங்கினால், ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள், முதலீட்டின் சராசரி வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது.

    ALSO READ |  நிரந்தர வைப்பு நிதி vs தொடர் வைப்பு நிதி : யார் எதை தேர்வு செய்யலாம்!

    NAV மற்றும் வர்த்தகத்துக்கான காலக்கெடு

    NAV கணக்கிடப்பட்டு ரிப்போர்ட் செய்யப்படும் போது, மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான அனைத்து வாங்குதல் மற்றும் விற்பனை ஆர்டர்களும் NAVயின் கட்-ஆஃப் நேரத்தின் அடிப்படையில் செயலாக்கப்படும். உதாரணமாக, கட்டுப்பாட்டாளர்கள் கட் ஆஃப் நேரத்தை மதியம் 1:30 மணி என நிர்ணயம் செய்தால், ஆர்டர்களை 1:30 மணிக்கு முன் பெற்று விற்க வேண்டும். அதே போல, கட் ஆஃப் நேரத்தை மாலை 3 மணி என நிர்ணயம் செய்தால், அந்த நேரத்துக்குள் வர்த்தகத்தை நிறைவேற்ற வேண்டும். இது, ஒவ்வொரு தேதியின் அடிப்படையில் NAV இல் செயல்படுத்தப்படும். கட் ஆஃப் நேரத்திற்குப் பிறகு பெறப்படும் ஆர்டர்கள், அடுத்த வேலை நாளின் அல்லது வர்த்தக நாளின் NAV அடிப்படையில் செயலாக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: