• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Mutual Fund-ல் முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா? - முழு விவரம்

Mutual Fund-ல் முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா? - முழு விவரம்

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு

நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிதியின் அடிப்படையில் தான் உங்களுக்கான வருமானம் கிடைக்கும். அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்தால், அதிக வருமானம் கிடைக்கும்.

  • Share this:
    நிதி மற்றும் முதலீடு பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வரும் நிலையில், எதில் முதலீடு செய்வது என்று முடிவு செய்வது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் என்பதைக் கேட்கும் போதே, கொஞ்சம் கலக்கம் ஏற்படுவதாக உணர்வார்கள். இது பாதுகாப்பான முதலீடு இல்லையோ என்ற சந்தேகம் எழும். மியூச்சுவல் ஃபண்ட் என்பதன் அடிப்படையை புரிந்து கொண்டால், அச்சுறுத்தும் உணர்வு தோன்றாது.

    பெரிய எண்ணிக்கையிலான  நபர்கள் அல்லது முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் திரட்டி, முதலீடு செய்யப்படுவது மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். திரட்டப்பட்ட பணம், குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யப்படும். அந்த முதலீடுகள் ஈட்டும் இலாபம், ஒவ்வொரு  முதலீட்டாளருக்கும் அவர்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்றவாறு பிரித்து அளிக்கப்படும். இந்த முதலீட்டு நிதியை நிர்வாகம் செய்ய, பிரத்யேகமான ஃபண்ட் மேலாளர்  ஒருவர் நியமிக்கப்படுவார்.

    மியூச்சுவல் ஃபண்ட் ஏன் தேவைப்படுகிறது

    தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் பணத்தை பங்குகளில் முதலீடு செய்வார்கள். முதலீட்டாளர்கள் தங்களின் விருப்பப்படி முதலீடுகளைத் தேர்வு செய்கிறார்கள். இவர்களின் முதலீட்டில் பெறும் லாபம் அல்லது நஷ்டம், இரண்டுக்குமே முதலீடு செய்தவர்கள் தான் பொறுப்பு.

    அவ்வாறு பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்ப்பவர்களும் உண்டு. பணம் இழந்தவர்களும் உண்டு. பங்குச்சந்தை எவ்வாறு இயங்குகிறது, எந்த பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம் போன்ற தகவல்களை நன்றாக அறிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பங்குகளை வாங்கிய பிறகு அதன் மதிப்பு ஏறுகிறதா இறங்குகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பலருக்கும், இதைப்பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தும் நேரம் இல்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், முதலீடு செய்ய விரும்பும் ஏராளமானவர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு உதவ உருவானது தான் மியூச்சுவல் ஃபண்ட்.

    Also Read : அஞ்சலக சேமிப்பு : கடைசி வரை கைவிடாத திட்டம்.. பிளான் பண்ணி முதலீடு செய்வது எப்படி?

    முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள், தாங்கள்  விரும்பும் தொகையை ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வார்கள்.  மேலே கூறியுள்ளது போல, முதலீடுகள் பற்றி நன்கு அறிந்தவர் ஒருவரை ஃபண்டு மேலாளராக நியமனம் செய்வார்கள். அந்த ஃபண்டு மேனேஜர், முதலீடுகளை நிர்வகித்து, சந்தையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, லாப நட்டக் கணக்கைப் பார்த்து, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பிரித்துக் கொடுப்பார்.

    மியூச்சுவல் ஃபண்டு - பலதரப்பட்ட முதலீடுகள்

    மியூச்சுவல் ஃபண்டில் திரட்டப்பட்ட பணம், நிறுவனங்களின் ஈக்விட்டி பங்குகள், பல்வேறு நிதிகள், சொத்துகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்.

    மியூச்சுவல் ஃபண்டில் திரட்டப்படும் நிதி, ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், கடன் பங்குகளிலும் (debt funds) அல்லது கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். கடன் பங்குகள் இன்கம் ஃபண்டுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவை தவிர்த்து, தங்கம் முதலீடு, ரியல் எஸ்டேட், பத்திரங்கள் ஆகியவற்றிலும் மியூச்சுவல் ஃபண்டு வழியே முதலீடு செய்யலாம்.  

    நிதியின் மொத்த முதலீட்டுத் தொகையில், ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் தாங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப யூனிட்டுகள் ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட யூனிட்டுக்கு ஏற்ப, முதலீடு செய்யப்பட்ட நிதிகளில் இருந்து பெறப்படும் இலாபம் பிரித்துக் கொடுக்கப்படும். சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில், ஃபண்டின்  செயல்திறன் மாறும். ஒரு குறிப்பிட்ட பங்கில் மட்டும் முதலீடு செய்து இலாபம் வருமா அல்லது நட்டம் ஏற்படுமா என்ற கவலை இல்லாமல், பலதரப்பட்ட நிதிகளில் செய்யப்பட்டு  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, குறைந்த ரிஸ்க்கில் கணிசமான வருமானத்தை ஈட்டும்.  

    அதிக ரிஸ்க் என்றால் அதிக வருமானம்

    ரியல் எஸ்டேட், பெருநிறுவன பங்குச்சந்தை போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு உங்களுக்கு கணிசமான தொகை தேவை. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, வெறும் 500 ரூபாய் இருந்தாலே போதுமானது. நீங்கள் முதலீட்டை கணிசமாக ஒரே தொகையாக செலுத்தாமல், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வரலாம். இந்த மாதந்திர முதலீட்டின் மூலமும் நீங்கள் வருமானம் பெறலாம். 

    Also Read : PF பேலன்ஸ்: அக்கவுண்டுல எவ்வளவு பணம் இருக்குன்னு இனிமே இப்படி கூட தெரிஞ்சிக்கலாம்!

    ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிதியின் அடிப்படையில் தான் உங்களுக்கான வருமானம் கிடைக்கும். அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்தால், அதிக வருமானம் கிடைக்கும். இல்லை, எனக்கு ரிஸ்க் வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், அதற்கேற்ற திட்டங்களும் உள்ளன. நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ப, உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டில் மட்டுமே கிடைக்கும். 

    உங்களின் வருமான அல்லது சேமிப்புத் தேவைக்கு ஏற்றவாறு நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை கால அளவின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். எதிர்காலத்துக்கு முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள், ஐந்து ஆண்டுக்கும் மேற்பட்ட லாங் டெர்ம் (நீண்ட கால) திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்று முதல் மூன்றாண்டுகள் வரையிலான தேவைக்கு, மீடியம் டெர்ம் திட்டங்களை தேர்வு செய்யலாம். குறுகிய கால, அதாவது ஒரு ஆண்டு அல்லது அதற்கும் குறைவான தேவைக்கு, ஷார்ட் டெர்ம் திட்டங்களை தேர்வு செய்யலாம்.   

    மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மிகவும் சுலபமாகி விட்டது. எனவே, உங்களுக்கு பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. அது மட்டுமின்றி, உங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டில், ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை வருமான வரியில் வரிவிலக்கு பெறலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: