‘Vote on Account’ என்றால் என்ன? ஏன் இதைச் சமர்ப்பிக்க வேண்டும்?

vote on account-ல் புதிய வரி விதிப்புகளும், புதிய திட்டங்களையும் அரசால் அறிமுகம் செய்ய முடியாது.

Web Desk | news18
Updated: January 12, 2019, 12:46 PM IST
‘Vote on Account’ என்றால் என்ன? ஏன் இதைச் சமர்ப்பிக்க வேண்டும்?
அருண் ஜேட்லி
Web Desk | news18
Updated: January 12, 2019, 12:46 PM IST
பட்ஜெட்டில் vote on account என்பது நடப்புப் பட்ஜெட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அடுத்த 4 மாதங்களுக்கு நீட்டிக்கப் பயன்படுத்தப்படுவது ஆகும்.

இடைக்காலப் பட்ஜெட்டின் போது பாராளுமன்றத்தில் vote on account மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அடுத்த நிதி ஆண்டுக்குத் தேவையான நிதியைப் பெற பாராளுமன்றம் எளிதாக அனுமதியை வழங்கும்.

பொதுவாக தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் போது அல்லது வேறு சில காரணங்களுக்காக அரசால் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாமல் போகும் போது கருவூலத்தில் உள்ள நிதியைச் செலவு செய்யும் அதிகாரத்தைப் பெற உதவும்.

vote on account மூலமாகச் செலவு செய்வதற்கான அதிகாரத்தைப் பெற அடுத்த நிதி ஆண்டுத் தொடங்கும் முன்பு அதாவது ஏப்ரல் 1-ம் தேதிக்குள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி, குடியரசுத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் பெறவேண்டும். vote on account-ல் புதிய வரி விதிப்புகளும், புதிய திட்டங்களையும் அரசால் அறிமுகம் செய்ய முடியாது.

இதுவே vote on account-க்கு பதிலாக இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் பாராளுமன்றம் அனுமதியில்லாமல் முழுப் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை எளிதாக அரசால் கருவூலத்தை அணுக முடியும். தொடர்ந்து நல பணிகளைச் செய்யவும், வரிகளில் திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியும்.

அடுத்த முழுப் பட்ஜெட் எப்போது?


2019 பிப்ரவரி 1-ம் தேதி இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு ஜூலை மாதம் முழுப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
Loading...
மேலும் பார்க்க: ஆதார் அட்டையின் சேவை கட்டணம் உயர்வு

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...