Home /News /business /

ஷேர் மார்க்கெட் புதுப் பங்கு வெளியீட்டு சந்தை இப்படி தான் இயங்குகிறதா?

ஷேர் மார்க்கெட் புதுப் பங்கு வெளியீட்டு சந்தை இப்படி தான் இயங்குகிறதா?

Initial public offering : ஒரு நிறுவனம் தன முதலீட்டு வட்டத்தில் இருந்து வெளியே வந்து முதன் முதலாக மக்கள் முன் சந்தைப்படுத்தப்படுவதே புதுப்பங்கு வெளியீட்டு சந்தை.

Initial public offering : ஒரு நிறுவனம் தன முதலீட்டு வட்டத்தில் இருந்து வெளியே வந்து முதன் முதலாக மக்கள் முன் சந்தைப்படுத்தப்படுவதே புதுப்பங்கு வெளியீட்டு சந்தை.

Initial public offering : ஒரு நிறுவனம் தன முதலீட்டு வட்டத்தில் இருந்து வெளியே வந்து முதன் முதலாக மக்கள் முன் சந்தைப்படுத்தப்படுவதே புதுப்பங்கு வெளியீட்டு சந்தை.

செய்திகளில் நாம் IPO என்பதை அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால் அதன் அர்த்தம் புரிந்திருக்காது. இப்பொழுது பார்த்துவிடலாம்.


ஒரு நிறுவனம் சந்தையில் நல்ல நிலையில் வளர்ந்து வருகிறது. அதை மக்களிடையே விரிவாக்க அதன் முதலாளி நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அல்லது ஒரு நிறுவனத்தை வணிக ரீதியாக விரிவாக்க முடிவு செய்கின்றனர். ஆனால் அதற்கு தேவையான பணம் நிறுவன கணக்கில் இல்லை. வென்ச்சர் முதலீட்டாளர்களின் பணமும் போதவில்லை எனும் பொழுது நிறுவனத்தின் சில பங்குகளை வணிக சந்தையில் விற்க முடிவு செய்வர்.

நிறுவனத்தின் பங்கை விற்று அதில் வரும் பணத்தை முதலீடாக போடுவர். பங்குகளை வாங்கியவர்கள் அந்த நிறுவனத்தின் புது பங்குதாரர்கள் ஆவார்கள். ஆனால் பங்குகளை விற்பது என்பது அவ்வளவு எளிதல்ல. சந்தைக்கு போகும் நிறுவனங்களுக்கு சில வரைமுறை உண்டு.

மெர்ச்சண்ட் பான்கேர் என்பவரை நியமிக்க வேண்டும். அவர் அந்த நிறுவனத்தின் due diligence certificate அதாவது 'நிறுவனத்தின்  கணக்கு உடைமை சான்றிதழை' வழங்குவார். அதோடு 'ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸ் வரைவையும்' தயாரித்து தருவார். அதில் அந்த நிறுவனத்தின் மதிப்பு, விற்க இருக்கும் பங்குகளின் அளவு, தனிப்பட்ட பங்குகளின் மதிப்பு என்று லிஸ்டிங் செய்ய இருக்கிறார்கள், என்று சந்தைக்கு வர இருக்கிறார்கள் போன்ற விவரங்கள் இருக்கும். அதை (SEBI )செபியிடம் சமர்ப்பிக்க வேண்டும். 



செபி அந்த நிறுவனத்தின் சந்தை ஆரோக்கிய நிலை, வரைவின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்வர். வரைவில் பிழை இருந்தால் அதை சரி செய்ய வாய்ப்பளிப்பர். திருத்தப்பட்ட வரைவு செபியால் அங்கீகரிக்கப்பட்டால் அடுத்த நகர்வு தொடங்கும்.

Draft red herring prospectus எனும் வரைவை புதுப்பங்கு சந்தைக்கு 3 நாள் முன் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். அது செபியின் வலைதளத்திலும் இருக்கும். 

இதையும் படிங்க ,...தொடர்பில்லா கார்டுகளை பயன்படுத்துவது நல்லதா? முழு விவரம்

மெர்ச்சண்ட் பேங்கர்கள் இந்த வரைவை வைத்து நிறுவனத்திற்காக விளம்பரம் செய்வர். இந்த தேதியில் எங்கள் 'முதல் பங்கு வெளியீடு' இருக்கும் என்று மக்களுக்கு தெரியப்படுத்துவர். பங்குகளின் 'பிரைஸ் பேண்ட்' அதாவது ஒரு பங்கின் குறைந்தபட்ச மற்றும் உச்ச விலை என்ன இருக்கலாம் என்று அந்த நிறுவனம் வரையறுக்கும். அந்த உச்ச விலை வரை மக்கள் அந்த பங்கை ஏலம்  எடுக்கலாம். ஏலம் நடக்கும் பொழுது பங்குகளின் தேவை, வாங்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை பொறுத்து மாறும். இதற்கு 'புக் பில்டிங்' என்றும்  பெயர்.

அடுத்து தான் திருவிழா…

புது பங்கு வெளியீடும் நாள் தான் IPO. ஒரு நிறுவனத்தின் பங்கு முதலில் மக்கள் முன் வரும் நிகழ்வு  தான் IPO. பொதுவாக 5 நாட்கள் இந்த சந்தை திறந்திருக்கும். வெளியிடப்பட்ட ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸை  படித்துவிட்டு, அந்த நிறுவன பங்குகளை வாங்க விருப்பம் உள்ள மக்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை ஏலம் எடுப்பர். 5ஆம் நாள் புதுபங்கு சந்தை மூடப்பட்டுவிடும்.

ஏலங்களை ஆராய்ந்து இறுதி விலையை நிறுவனம் வெளியிடும். அதற்கு ஏற்றார் போல் பங்குகளின் எண்ணிக்கையும் அளவும் மாறுபடும். அதை தகுந்த ஏலம்  அடுத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வர்.



ஒரு சில நேரங்களில் எதிர்பார்த்ததை விட அதிக ஏலங்கள் எடுக்கப்பட்டிருக்கும் அப்போது நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ற ஏலங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற ஏலக்காரர்களுக்கு பணம் திருப்பி தரப்படும்.

ஒரு சிலநேரங்களில் குறைவான ஏலம் எடுக்கப்பட்டிருக்கும். அப்போது எதில் தவறு செய்தோம். எப்படி விலையை கூட்டவேண்டும் என்று ஆய்வு செய்வர். நிகர சந்தைக்கு வரும் பொழுது அதை பயன்படுத்துவர்.

ஒரு நிறுவனம் தன முதலீட்டு வட்டத்தில் இருந்து வெளியே வந்து,  முதன் முதலாக மக்கள் முன் சந்தைப்படுத்தப்படுவதே புதுப்பங்கு வெளியீட்டு சந்தை. இதை வைத்து தான் அந்த நிறுவனம் பிரதான சந்தைக்குள் நுழையும்.

உங்களுக்கு பிடித்த ஒரு ஸ்டார்ட் அப் முதலில் சந்தைக்கு வந்தால் நீங்க இந்த IPO மூலம் தான் அதன் பங்குதாரர் ஆகலாம்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Business, Share Market

அடுத்த செய்தி