Home /News /business /

விண்ட்ஃபால் வரி என்றால் என்ன? எண்ணெய் நிறுவனங்களுக்கு இவ்வரியை விதிக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை!

விண்ட்ஃபால் வரி என்றால் என்ன? எண்ணெய் நிறுவனங்களுக்கு இவ்வரியை விதிக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விண்ட்ஃபால் டேக்ஸ் மீண்டும் விவாதத்தில் உள்ளது. ஹங்கேரி மற்றும் இத்தாலி போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த வரியை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே எரிபொருள், உணவு மற்றும் உர மானியங்கள் மீதான பலூனிங் பொது செலவினங்களை ஈடுகட்ட அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் (oil and gas producers) மீது விண்ட்ஃபால் (Windfall tax) எனப்படும் வரி விதிக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் ONGC தலைவரும் நிர்வாக இயக்குநருமான அல்கா மிட்டல், தங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் வரவில்லை என்று கூறியிருந்தாலும் Windfall tax என்றால் என்ன என்பதை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது தற்போது அவசியமாகிறது.

ஜாக்பாட்டாக மாறும் அதிஷ்ட காற்று..

சில நேரங்களில் ஒரு தொழிலில் சுய முயற்சிகள் ஏதுமின்றி திடீரென அதிகம் பணம் சம்பாதிப்பது ஒருமுறை வரி விதிப்பிற்குட்பட்டதாக (one-time tax) மாறலாம். ஆம், one-time tax. ரஷ்யா-உக்ரைன் போர் சப்ளையில் சீர்குலைவை ஏற்படுத்தியதால், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் திடீரென ஏராளமான பணம் ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கச்சா விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் $139-ஐ தொட்டுள்ளது. இந்த சூழலில் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு லாபம் சம்பாதித்து வரும் நிறுவனங்கள் செயல்திறனை மேம்படுத்தியதாலோ அல்லது அவர்கள் செய்த ஏதேனும் கண்டுபிடிப்புகளாலோ பெரும் பணம் சம்பாதிக்கவில்லை. சுய முயற்சிகள் சிறிதும் இன்றி மிகப்பெரிய லாபத்தை பார்த்து வருகின்றன எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள்.

எனவே எண்ணெய் விலை பீப்பாய்க்கு $70-க்கு மேல் செல்லும் போதெல்லாம், சிறப்பு வரி விதிக்கப்பட்டு இந்த வரி வருமானம் நுகர்வோரின் எரிபொருள் கட்டணங்களுக்கு மானியமாக பயன்படுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இப்போது ஏன்?

கடந்த 2018-ல் எண்ணெய் விலை ஒரு பீப்பாய் $80-ஐ தாண்டிய போது கூட கொள்கை வகுப்பாளர்களின் மனதில் இத்தகைய வரி விதிக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பின் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒருங்கிணைந்த விரிவான செயல் திட்டத்திலிருந்து (Joint Comprehensive Plan of Action) வெளியேறியதை அடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இப்போது எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விண்ட்ஃபால் டேக்ஸ் மீண்டும் விவாதத்தில் உள்ளது. ஹங்கேரி மற்றும் இத்தாலி போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த வரியை விதித்துள்ளன. சுருக்கமாக சொன்னால் windfall tax என்பது எதிர்பாராத வகையில் கிடைத்த அல்லது அதிகப்படியான பெரிய லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.

ஷேர் மார்க்கெட்டில் பிரதிபலிப்பு..

கடந்த வாரம், UK எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களின் லாபத்தின் மீது 25% விண்ட்ஃபால் வரியை விதித்து $6.3 பில்லியனைத் திரட்டியது. இங்கிலாந்து அரசாங்கத்தைப் போலவே இந்திய அரசாங்கமும் அதன் பொதுச் செலவுத் திட்டம் மற்றும் எரிபொருள், உணவு மற்றும் உர மானியங்களைச் சந்திக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு விண்ட்ஃபால் வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

windfall tax குறித்த அறிக்கைகள் வெளியான சில நாட்களில் ONGC மற்றும் BPCL பங்குகள் 9 சதவீதம் மற்றும் 5 சதவீதம் சரிந்தன. நிதி சேவைகள் நிறுவனமான Nomura Holdings, எண்ணெய் பெறுதலில் ஒவ்வொரு $5-ஒரு-பீப்பாய் மாற்றம் ONGC-ன் FY23 தனித்த EPS-ஐ 8 சதவிகிதம் பாதிக்கும் மற்றும் எரிவாயு உணர்தலில் ஒவ்வொரு $0.5/mmbtu மாற்றமும் ONGC-ன் FY23 தனித்த EPS-ஐ 4 சதவிகிதம் பாதிக்கும் என்று கூறி உள்ளது.

இந்த வரி அரசுக்கு உதவுமா?

கண்டிப்பாக உதவும். அதிக செலவில் பொருளாதாரத்தை ஆதரிக்க வேண்டியிருக்கும் போது, கச்சா விலை உயர்வினால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏற்படும் போது அதற்கு வரிகள் தேவை. எரிபொருளின் மீதான கலால் வரியை அரசாங்கம் குறைத்துள்ளதால் பெட்ரோல் விலை ரூ.8 மற்றும் டீசல் விலை ரூ.6 குறைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடியை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு windfall tax-ஆல் ஈடுசெய்யப்படலாம். ஆனால் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

Also see... பிரபல கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

ஒன்று, எண்ணெய் உற்பத்தியாளர்களுடன் உற்பத்தி-பகிர்வு ஒப்பந்தங்களில் (production-sharing contracts) கையெழுத்திட்டுள்ளது, இதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் அரசாங்கத்திற்கு ஒரு பங்கு கிடைக்கும். இந்த வரியால் லாபத்தில் ஒரு பங்கை இழக்க நேரிடுகிறது. தவிர எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் உட்பட பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் அதிக ஈவுத்தொகையை (dividends) பெற்று வருகிறது. கடந்த நவம்பரில், ஓஎன்ஜிசி ரூ.4,180 கோடியும், பிபிசிஎல் ரூ.575 கோடியும் ஈவுத்தொகையாக செலுத்தியுள்ளன. ஒருவேளை windfall tax விதிக்கப்பட்டு அதன் மூலம் லாபம் குறைந்தால் அரசுக்கு வரும் ஈவு தொகையும் குறையும்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Fuels Tax, Oil companies

அடுத்த செய்தி