ஹோம் /நியூஸ் /வணிகம் /

சைபர் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன - இது யாருக்கு தேவை?

சைபர் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன - இது யாருக்கு தேவை?

மாதிரி படம்

மாதிரி படம்

மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  தனி நபருக்கான காப்பீடு முதல், வீட்டு காப்பீடு, வாகனக் காப்பீடு என்று பல விதமான காப்பீடுத் திட்டங்கள் உள்ளன. இதில் சைபர் இன்ஷூரன்ஸ் என்று சமீபகாலமாக புதிய காப்பீட்டு வகை ஒன்று பிரபலமாகி வருகிறது. இது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு, டிஜிட்டல் முறைகேடுகளால் ஏற்படும் பாதிப்புக்கு நஷ்ட ஈடு வழங்கி நிதி ரீதியான இழப்பிலிருந்து பாதுகாக்க உதவும். இதைப் பற்றி முழு விவரங்கள் பார்க்கலாம்.

  டிஜிட்டல் உலகில், பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் முழுக்க ஆன்லைனிலேயே வணிகம், தொழில் செய்து வருகின்றனர். இதில், எல்லாருக்குமே தங்கள் தரவு, வணிக பரிவர்த்தனை விவரங்கள் என்று ஆன்லைன் ஹேக்கிங் வழியே இழக்கும் ஆபத்து உள்ளது. வைரஸ் தாக்குதல், ஃபிஷ்ஷிங், அடையாளத் திருட்டு, சமூக வலைத்தள கணக்கின் விவரங்கள் திருடுதல் அல்லது அதை வைத்து தவறாக பயன்படுத்துதல், மால்வேர் தாக்குதல், வங்கிக் கணக்கு விவரங்கள் திருட்டு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சைபர் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு தரும்.

  சைபர் இன்ஷூரன்ஸ் ஏன் தேவை?

  கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக, கோவிட் தொற்று காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. அதுவே இன்றளவும் தொடர்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் போது, ஆன்லைனில் திருட்டுகளும் அதிகரித்து வருகின்றன. அதைத் தடுக்க, உங்கள் தரவு, தனிப்பட்ட விவரங்கள், உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திருட்டுப் போவதால் ஏற்படும் நிதி ரீதியான இழப்புகளை ஈடு செய்ய சைபர் இன்ஷூரன்ஸ் உதவுகிறது. சைபர் இன்ஷரன்ஸ் தனிநபர்கள் மட்டுமில்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களும் வாங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  Read More:உலக அளவில் ஃபோன் விற்பனையில் மீண்டும் சரிவு.! ஆனால் தொடர்ந்து லாபம் ஈட்டும் ஆப்பிள் நிறுவனம்

  ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்போடும் போது, 2022 மார்ச் மாதம் முடிய, டிஜிட்டல் பேமெண்ட்டுகளில் செலுத்தப்பட்ட தொகைகள், 96.32 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை டிராக் செய்யும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட் இண்டெக்ஸில், 29.08% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

  மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம், அனைவரும் தனிநபர் சைபர் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. தன்னுடைய சேமிப்பு, முதலீடு என்று எல்லாமே சைபர் தாக்குதல் அல்லது ஆன்லைன் மோசடி மூலம் திருடு போகும் வாய்ப்பு இருப்பதால், சைபர் இன்ஷூரன்ஸ் ஒரு பாதுகாப்பாக செயல்படும் என்று கூறியுள்ளது. இந்த பாலிசிகள் குறைவான ப்ரீமியம் தொகையில் கிடைக்கிறது. 10 லட்சம் தொகைக்கு பாலிசி எடுத்தால், தோராயமாக ரூ. 2848 ப்ரீமியம் தொகை செலுத்தினால் போதும் என்று பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  டாடா ஏஐஜி, ஐசிஐசிஐ லம்பார்ட், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்கி வருகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Cyber crime, Cyber fraud