• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வாடகை செலுத்தியும் வங்கி லாக்கரை நீண்ட காலம் இயக்காமல் இருந்தால் என்ன ஆகும்? - ரிசர்வ் வங்கி புது விதிமுறைகள் அமல்!

வாடகை செலுத்தியும் வங்கி லாக்கரை நீண்ட காலம் இயக்காமல் இருந்தால் என்ன ஆகும்? - ரிசர்வ் வங்கி புது விதிமுறைகள் அமல்!

Bank lockers

Bank lockers

வங்கி பாதுகாப்பு பெட்டகங்கள் விஷயத்தில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது.

  • Share this:
தங்க ஆபரணங்கள், சொத்துப் பத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்து பாதுகாப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும் ரிஸ்கான விஷயம். வாசலில் இருக்கும் அண்டா, குண்டாவையே தூக்கிச் செல்லும் திருடர்களிடமிருந்து நம் வீட்டு விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்க நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் வங்கி லாக்கர்கள்.

குறைந்த கட்டணத்தில் வங்கிகள் நமக்காக தரும் ஒரு பாதுகாப்பு பெட்டகம் தான் இந்த லாக்கர்கள். உயர் பாதுகாப்பு கொண்ட இந்த லாக்கர்களை வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இன்றி வங்கிகளால் திறக்க இயலாது என்பதால் கவலையில்லாமல் நமது பொருட்களை வைத்து தேவைப்படும் போது மட்டும் எடுக்கலாம்.

Also read: 94,000 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கிய ஆபத்தான சிறுகோள்!

வங்கி பாதுகாப்பு பெட்டகங்கள் விஷயத்தில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது. அதன்படி நீங்கள் முறையாக வாடகை கட்டணத்தை செலுத்தி வந்தாலும் வங்கி லாக்கர்களை பயன்படுத்தாமல் பூட்டியே வைத்திருந்தால் வங்கிகள் அந்த லாக்கர்களை உடைத்து திறந்து கொள்ள வங்கிகளுக்கு அனுமதி அளித்து ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தரப்பிலிருந்தும், வங்கிகள் தரப்பிலிருந்தும் வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டிருகிறது ரிசர்வ் வங்கி.

Also read:  ஆப்கனில் எல்லாம் போச்சு.. இந்தியர்கள் தான் காப்பாத்துனாங்க, ரொம்ப நன்றி – ஆப்கன் பெண் நெகிழ்ச்சி

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், வங்கி லாக்கர்களின் வாடகை தொகை முறையாக செலுத்தப்பட்டு வந்தாலும் வாடிக்கையாளர் 7 ஆண்டுகளுக்கு லாக்கரை இயக்காமல் வைத்திருந்தால், அந்த வாடிக்கையாளரின் சட்டப்படியான வாரிசு மற்றும் இரண்டு சாட்சியங்கள் முன்னிலையில் லாக்கரை திறந்து அதில் இருந்து பொருட்களை பாதுகாப்பாக அவர்களுக்கு பரிமாற்ற முடியும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் வங்கி தரப்பில் அந்த வாடிக்கையாளரின் லாக்கர் திறப்பு குறித்து முன்பே நோட்டீஸ், அல்லது இமெயில், எஸ்..எம்.எஸ் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முகவரியில் ஆள் இல்லை என்ற காரணத்தினால் நோட்டீஸ் திரும்பி வந்தால் உள்ளூர் மொழி, ஆங்கிலம் என இரண்டு செய்தித்தாள்களில் விளம்பரம் தர வேண்டும். அதே போல வாரிசுகளும் கோராத வங்கி லாக்கர்களை இதே முறையில் திறந்தால் அதில் இருக்கும் பொருட்களை சீலிட்டு பாதுகாக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: