உங்கள் வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், நீங்கள் உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். காலக்கெடுவிற்குள் உங்கள் ITR-ஐ தாக்கல் செய்யாமல் விட்டீர்கள் என்றால் அது உங்கள் மீது வருமான வரி துறையின் நடவடிக்கையை எடுக்கும். சில நேரங்களில் ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. குறிப்பாக தொற்று காரணமாக வரி செலுத்துவோரின் சுமையை குறைக்க கடந்த 2 நிதியாண்டுகளில் காலக்கெடுவை அரசு நீட்டித்து.
எனினும் அபராதம், செலுத்தப்படாத வரிகள் மீதான வட்டி அல்லது சட்டப்பூர்வ சோதனை ஆகியவற்றை தவிர்க்க உங்கள் ITR-களை காலகெடுவிற்கு முன் தாக்கல் செய்வது நல்லது. உங்கள் ITR என்பது உங்கள் வருமானம் மற்றும் நிதியாண்டில் செலுத்தப்பட்ட வரிகள் பற்றிய தகவல்களைக் கொண்ட முக்கியமான ஆவணம் ஆகும். காலக்கெடுவிற்கு பிறகு தாக்கல் செய்யப்படும் ITR, பிலேட்டட் ரிட்டர்ன் என்று குறிப்பிடப்படுகிறது. உரிய தேதிக்குள் உங்கள் ITR-ஐ தாக்கல் செய்யாவிட்டால் நீங்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம்...
உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது வரிக்கு இணங்குவதற்கான ஒரு வழி. எனினும் நீங்கள் காலக்கெடுவை தவறவிட்டிருந்தால் கவலை வேண்டாம். டிசம்பர் 31, 2022-க்குள் உங்கள் வருமானத்தை நீங்கள் தாக்கல் செய்யலாம். எனினும் இதை செய்வதற்கு நீங்கள் அபராதம் செலுத்த நேரிடும். செக்ஷன் 234F-ன் படி 2021-22-ஆம் ஆண்டிற்கான செலுத்தப்படாத வரிகளுக்கான வட்டியுடன் உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ரூ.5,000, வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் ரூ.1000 அபராதம் செலுத்த நேரிடும். உங்கள் வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஆவணப்படுத்தல் நோக்கங்களுக்காக உங்கள் வருமானத்தை நீங்கள் தாக்கல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அபராதம் விதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வட்டி..
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் காலக்கெடுவிற்குப் பிறகு உங்கள் ITR-ஐ தாக்கல் செய்வது நிலுவைத் தொகையின் 1% வட்டியை உங்களிடமிருந்து ஈர்க்கும். அதாவது நிலுவை தொகையை 1% வட்டியுடன் சேர்த்து நீங்கள் செலுத்த வேண்டும். காலக்கெடு முடிவடைந்த நாளில் இருந்து வட்டி கணக்கீடு தொடங்கும். எனவே உங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் எவ்வளவு தாமதம் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
Also Read : வருமான வரி செலுத்தும் போது ரூ. 10,000 வரிவிலக்கு வேண்டுமா.? அப்ப இதை செய்யுங்கள்.!
சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம்..
உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யத் தாமதித்தாலோ அல்லது தவறினாலோ, இதில் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதற்கான விளக்கம் கேட்க வருமான வரித்துறை சட்டப்பூர்வ நோட்டீஸை உங்களுக்கு அனுப்பலாம். ஒருவேளை வருமான வரித்துறை உங்கள் விளக்கத்தில் திருப்தி அடையவில்லை எனில், சட்டப்படி மேல் நடவடிக்கையை மேற்கொள்ள முனையலாம்.
சில நன்மைகளை நீங்கள் இழக்க நேரிடலாம்..
உங்கள் வருமான வரி கணக்கை சரியான நேரத்தில் தாக்கல் செய்யாமல் விடுவதால் சில நன்மைகளை இழக்கலாம். நீங்கள் எதிர்காலத்தில் கடன் வாங்கத் திட்டமிட்டால், உங்கள் திருப்பி செலுத்தும் திறனை மதிப்பிட, உங்கள் வருமானத்தை சரிபார்க்க வங்கிகளுக்கு உங்களது முந்தைய ஆண்டு ஐடிஆர்-கள் தேவைப்படும்.
Also Read : சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் வருமான வரி அறிக்கை பதிவு செய்ய வேண்டுமா.?
அதே போல காலக்கெடுவிற்கு முன் உங்கள் வருமானத்தை தாக்கல் செய்வது ஒரு நிதியாண்டில் உங்கள் இழப்புகள் பற்றி வருமான வரி துறைக்கு தெரியப்படுத்த அனுமதிக்கிறது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, இந்த இழப்புகளுக்கு விலக்கு கோரலாம்.
Also Read : மக்களே உஷார்... இந்த 5 பொறிகளில் சிக்கினால் உழைத்த காசு மொத்தமும் போய்விடும்.!
பல நாடுகளின் தூதரகங்கள் உங்களுக்கு விசா வழங்குவதற்கு முன் உங்கள் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அறிய உங்கள் ITR அறிக்கைகளை பார்க்கின்றன. எனவே உங்களின் வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலும், இந்த நன்மைகளைத் தவறவிடாமல் இருக்க ITR-ஐ தாக்கல் செய்வது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax