Home /News /business /

தவறான ITR தாக்கல்: வருமான வரித்துறையின் அறிவிப்புக்குப் பதில் சொல்லவில்லை என்றால் என்ன ஆகும்?

தவறான ITR தாக்கல்: வருமான வரித்துறையின் அறிவிப்புக்குப் பதில் சொல்லவில்லை என்றால் என்ன ஆகும்?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வருமான வரித்துறையிடம் இருந்து அறிவிப்புக் கடிதம் வந்தால் அதற்குப் பதில் அளிப்பது அவசியமானது. அப்படித் தவறிவிட்டால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி இங்குப் பார்ப்போம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வருமான வரித்துறையிடம் இருந்து அறிவிப்புக் கடிதம் வந்தாலே கொஞ்சம் பதற்றமாகத்தான் இருக்கும். எதற்காக இந்த கடிதம் வந்துள்ளது, வருமான வரி அறிக்கையைச் சரியாகத்தானே தாக்கல் செய்திருக்கிறோம், எந்த ஆண்டுக்கான அறிவிப்பு இது என்று கடிதத்தை வாங்கி பிடித்துப் படிப்பதற்குள்ளேயே பல கேள்விகள் மனதுக்குள் தோன்றும்! ஆனால் வருமான வரித்துறை பல்வேறு காரணங்களுக்காக வரி செலுத்துபவர்களுக்குக் கடிதம் வழியாக அறிவிப்புகளை மேற்கொள்கிறது.

இதைப் பற்றிப் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. முக்கியமாக நீங்கள் வருமான வரி அறிக்கையைத் தவறாகத் தாக்கல் செய்திருந்தால் அல்லது தாக்கல் செய்த அறிக்கையில் கணக்கீடுகள், முதலீடுகள் உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தால் அதைப் பற்றிய விவரங்களை உங்களுக்கு அறிவிக்கத்தான் வருமான வரித்துறை கடிதம் வழியாகத் தெரிவிக்கும். ஒருவேளை அவ்வாறு நீங்கள் தவறாகத் தாக்கல் செய்த அறிக்கைக்குக் கடிதத்தை அறிவிப்பு மூலம் பெற்று, அதற்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

தவறான ITR என்பது என்ன?

வருமான வரித்துறை சட்டத்தின் பிரிவு 139(9) இன் கீழ், நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையில் ஏதேனும் பிழை அல்லது தவறு இருந்தால், ஏதாவது தகவல் விடுபட்டிருந்தால், ரசீதுகள், கட்டணம் செலுத்திய விவரங்கள் பொருந்தவில்லை என்றால், அதைத் தவறான ITR என்று வருமானவரித்துறை சுட்டிக்காட்டுகிறது.

இதைப் பற்றிய அறிவிப்பு உங்களுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து கிடைத்த உடனேயே நீங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் என்ன ஆகும் என்று இங்கே பார்க்கலாம்.

நீங்கள் வருமான வரி அறிக்கை பதிவு செய்யவே இல்லை, செல்லுபடியாகாத தாக்கல் :

நீங்கள் தவறான அல்லது பிழையான அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து அறிவிப்பு வந்திருந்தால் அதற்கு நீங்கள் உரியப் பதில் அளிக்காமல், திருத்தம் செய்து மீண்டும் அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் இருக்கும் பட்சத்தில், நீங்கள் குறிப்பிட்ட ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை, உங்களுடையது செல்லுபடியாகாத வருமான வரி அறிக்கை என்று வருமான வரித்துறை முடிவு செய்யும். இந்த சூழலில் நீங்கள் ஏதேனும் ரீஃபண்டு பெறுவதாக இருக்கும் பட்சத்தில் அந்த தொகை வழங்கப் படாது.

அது மட்டும் இல்லாமல் உங்களின் வருமான வரி அறிக்கை கணக்கீட்டில் வணிகத்தில் நஷ்டம் அல்லது பங்குகளை வாங்கி விற்றதில் நஷ்டம் உள்ளிட்ட வருமானங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், நீங்கள் அடுத்த ஆண்டுக்கு, அந்த நஷ்டத்தை எடுத்துச் செல்ல முடியாது. ஒரு ஆண்டுக்கு நீங்கள் வருமான வரி அறிக்கையைச் சரியாகத் தாக்கல் செய்யாமல் போனால் அது அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பாதிக்கும்.

Also Read : வேலையில் இருந்து ரிட்டயர்மென்ட் பெறுவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் செய்திடுங்கள்!

ஒருவேளை நீங்கள் வரியைத் தவறாகக் கணக்கிட்டு அதைச் சரி செய்து கூடுதல் வரியைச் செலுத்தவில்லை என்றால் வருமான வரித்துறை உங்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கான அறிவிப்பையும் அனுப்பும்.

வருமான வரித்துறையின் அறிவிப்பைப் பெற்றவுடன் என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி தவறாக தாக்கல் செய்திருப்பது பற்றி உங்களுக்கு அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் வருமான வரித்துறைக்குப் பதில் அளிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு 15 நாட்கள் போதவில்லை என்றால் நீங்கள் உங்களுடைய அசஸ்மென்ட் அதிகாரியை தொடர்புகொண்டு கூடுதலான கால அவகாசம் பெறலாம்.

 
Published by:Janvi
First published:

Tags: Business, Income tax

அடுத்த செய்தி