Home /News /business /

நிதி அமைச்சராக இருந்தால் என்ன செய்வீர்கள்? ரகுராம் ராஜன் பதில்

நிதி அமைச்சராக இருந்தால் என்ன செய்வீர்கள்? ரகுராம் ராஜன் பதில்

ரகுராம் ராஜன்.

ரகுராம் ராஜன்.

மத்திய அரசு வேலை வாய்ப்பின்மையை போக்குவதற்கு மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை.

  • News18
  • Last Updated :
    ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமீபத்தில் ‘தர்டு பிள்ளர்”(மூன்றாவது தூண்) என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

    இந்த புத்தகம் குறித்து ரகுராம் ராஜன் சிஎன்பிசி18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நீங்கள் நிதி அமைச்சராக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்குப் பதில் அளித்த ரகுராம் ராஜன் ‘நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலைத் தீர்ப்பேன், வங்கிகளில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவேன், விவசாயக் கொள்கைகளை மறு ஆய்வு செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

    ரிசர்வ் வங்கி செயல்பாடுகளில் மத்திய அரசின் இடையூறுகள் உள்ளதா என்று கேட்டபோது ‘பெரிய அளவில் இல்லை என்றும், அவ்வப்போது இருவருக்கும், பிரச்சனைகள் எழும்’ என்று ரகுராம் ராஜன் கூறினார்.

    முன்னதாக வேறு ஒரு பேட்டியில் மத்திய அரசு வேலை வாய்ப்பின்மையை போக்குவதற்கு மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை, இளைஞர்கள் வேலையைத் தேடுகிறார்கள், பணமதிப்பால் நடந்தது என்ன என்று மத்திய அரசு விளக்க வேண்டும்.

    வேலை வாய்ப்பு குறித்து நாம் வைத்துள்ள தகவல்களை மேம்படுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஆணையம் வைத்துள்ள தகவல்களை நாம் முழுமையாக நம்ப முடியாது என்றும் ரகுராம் ராஜன் கூறியிருந்தார்.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Raghuram Rajan

    அடுத்த செய்தி