ஹோம் /நியூஸ் /வணிகம் /

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளது?

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளது?

காட்சி படம்

காட்சி படம்

New Labour Law | புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், வேலை நாட்களில் மாற்றம் வரவுள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் புதிய தொழிலாளர் திட்டங்களை அமல்படுத்த உள்ளதாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் திட்டங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இதன் கீழ் ஒரு பணியாளரின் சம்பளம், அவரது பிஎஃப் பங்களிப்புகள் மற்றும் வேலை நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய தொழிலாளர் திட்டங்களை விரைவில் அமல்படுத்த முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அனைத்து மாநிலங்களும் இன்னும் இதற்கான விதிகளைத் தயாரிக்காததால், இது நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் எடுத்து கொள்ளலாம். ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் ஆகிய நான்கு புதிய தொழிலாளர் திட்டங்களை மத்திய அரசு இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமல்படுத்த உள்ளது.

கொண்டு வரவுள்ள மாற்றங்கள் :

புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், வேலை நாட்களில் மாற்றம் வரவுள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். புதிய விதி அமலுக்கு வந்தவுடன், நிறுவனங்கள் ஊழியர்களை ஐந்து நாட்களுக்கு பதிலாக நான்கு நாட்கள் வேலை படியாக இருக்கும். மேலும் மூன்று நாட்கள் வார விடுமுறை கிடைக்க கூடும். இருப்பினும், இதில் ஒரு சிக்கல் உள்ளது. வேலை நேரம் குறைக்கப்படாது என்பதால், ஊழியர்கள் எட்டு மணிநேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்தாக வேண்டி இருக்கும்.

also read : புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் Life Insurance எடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

 

இதில் கொண்டு வரப்போகும் மற்றொரு பெரிய மாற்றம் என்னவென்றால், வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதியில் பணியாளர்கள் மற்றும் முதலாளியின் பங்களிப்பு ஆகியவற்றின் விகிதத்தில் மாற்றம் வரவுள்ளது. புதிய விதிகளின்படி, பணியாளரின் அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும். இது ஊழியர் மற்றும் முதலாளியின் பிஎஃப் பங்களிப்புகள் அதிகரிக்கும். அதே வேளையில், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, வீட்டு சம்பளம் குறையும். புதிய வரைவு விதிகளின்படி, பணி ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் பணமும், பணிக்கொடைத் தொகையும் இதில் அதிகரிக்கும்.

இந்த நான்கு தொழிலாளர் வரைவுகள் 2022-23 நிதியாண்டில் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது, ஏனெனில் அதிக எண்ணிக்கையிலான மாநிலங்கள் இதற்கான வரைவு விதிகளை இறுதி செய்துள்ளன. பிப்ரவரி 2021 ஆண்டில் இந்த திட்டங்கள் குறித்த வரைவு விதிகளை இறுதி செய்யும் செயல்முறையை மத்திய அரசு முடித்துள்ளது. எல்லா மாநிலங்களும் இதை ஒரே நேரத்தில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது என்று கடந்த ஆண்டு பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

also read : பெர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்டு - எது உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்?

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பீகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்கள் ஏற்கனவே தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் குறித்த வரைவு விதிகளை முன்பே வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Labour Law