ஹோம் /நியூஸ் /வணிகம் /

பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்னென்ன?

பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்னென்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுவதால், வாகனங்களை கழுவும் போது கவனம் தேவை என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காரணம், எத்தனால் கலந்த பெட்ரோலுடன், தண்ணீர் சேர்ந்தால், பெட்ரோலில் தண்ணீர் நிற்பது போல், தனியாக நிற்காது, தண்ணீர் பெட்ரோலுடன் இருக்கும் எத்தனாலுடன் கலந்துவிடும். இது வாகனங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

  உலகிலேயே அதிக அளவில் கரும்பு தயாரிக்கும் நாடு பிரேசில். இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலில் 100 சதவிதம் எத்தனாலில் ஓடும் கார்கள் உள்ளன. அதை பார்த்து தான், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, 2003ம் ஆண்டில், Ethanol Blended Petrol Programme என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பின்னர், 2008ம் ஆண்டு அக்டோபரில், பெட்ரோலில் 5 சதவித பெட்ரோலை கண்டிப்பாக கலக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இவ்வாறு செய்வதன் மூலம், 2008ம் ஆண்டு காலகட்டத்திலேயே, சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும் என்று மத்திய அரசு கணித்தது.

  ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை

  பெட்ரோலில், எத்தனாலை கலக்கும் திட்டத்தை கொண்டு வந்தால், பெட்ரோல் விலையும் ஒரு குறிப்பிட்ட சதவிதமேனும் குறைய வேண்டும். காரணம், எத்தனால், 5 சதவித ஜிஎஸ்டி வரி வரம்பில் இருக்கும் ஒரு பொருள். பெட்ரோல், எத்தனால் கலப்பு மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்பது மட்டுமல்லாமல், சுற்றுசூழல் மாசும் குறையும் என்று மத்திய அரசு கருதுகிறது. இப்படி இருக்க, பிரேசில் போன்று, பெட்ரோலுக்கு பதிலாக ஏன் 100 சதவிதம் எத்தனாலை வாகனங்களில் பயன்படுத்த முடியாதா என்ற கேள்வி எழலாம்.

  மேலும் படிக்க... Petrol-Diesel Price | தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கலக்கம்

  எத்தனால் என்பது கரும்பு சக்கையில் இருந்து கிடைக்கும் ஒரு ஆல்கஹால். இதை பெட்ரோலுடன் கலந்தால், கரும்பு விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் உள்ள வாகனங்களின் எஞ்சின்களில், 10 சதவிதத்திற்கு மேல் ஆல்கஹாலை எரிபொருளாக பயன்படுத்த முடியாது.

  அப்படி பயன்படுத்தினால், என்ஜினில் உள்ள அலுமினிய பாகங்கள், பெட்ரோல் என்ஜினுக்கு கொண்டு செல்லும் ரப்பர் பாகங்களை, பெட்ரோல் டேங்க் போன்றவற்றை எத்தனால் அரித்துவிடும். இதன் காரணமாகவே, 13 ஆண்டுகளுக்கு முன்னர் 5 சதவிதத்தில் தொடங்கி தற்போது 10 சதவிதம் என்ற அளவில் உள்ளது. இதில் ஒரு முரண்பாடான விஷயம் உண்டு. மத்திய அரசின் மாற்று எரிபொருள் கொள்கையில், 20 சதவித எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 10 சதவிதத்திற்கு மேல் எத்தனாலை நம் இந்திய கார்கள் தாங்காது என்ற போது, 20 சதவிதம் தற்போது சாத்தியமா என்பது கேள்விகுறி.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Petrol