கொரோனாவால் கிடைத்த விழிப்புணர்வை அடுத்து பெரும்பாலான மக்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். அதே சமயம் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக மருத்துவமனையின் சிகிச்சை செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செலுத்தும் முழு தொகையில் ஒரு சிறிய பகுதி இன்சூரஸ் நிறுவனத்திற்கான பிரீமியமாக கணக்கிடப்படுகிறது. இதனால் பாலிசிதாரர் தனது முழு மருத்துவச் செலவையும் இன்சூரன்ஸ் நிறுவனமே செலுத்த வேண்டும் என்பது நிறைவேறாதது ஆகும்.
இதனால் மருத்துவமனையின் சில செலவினங்களை பாலிசிதாரர்கள் தங்களது பாக்கெட்டில் இருந்து செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மருத்துவக் காப்பீடு இருந்தாலும், பாலிசிதாரர் பில்லில் ஒரு பகுதியை மருத்துவமனைக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
செக்யூர் நவ் இன்சூரன்ஸ் புரோக்கர் நிறுவனத்தின் இணை நிறுவனர் கபில் மேத்தா கூறுகையில், "செக்யூர் நவ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் 500க்கும் மேற்பட்ட சமீபத்திய இன்சூரன்ஸ் க்ளைம் மாதிரிகளின் அடிப்படையில், பாலிசிதாரர் செலுத்தும் மருத்துவமனை பில் தொகையில் இருந்து 20 சதவீதத்தை திரும்ப பெற முடியாது” என்கிறார்.
ஹெல்த் இன்சூரன்ஸின் போது கேஸ் லெஸ் முறையை பயன்படுத்தினால் ஏற்படும் 3 செலவினங்கள் என்னென்னவென பார்க்கலாம்..
1. காப்பீட்டுத் தொகையை விட மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும் போது, அந்த தொகை நோயாளி அல்லது அவரது பாலிசிதாரரால் செலுத்தப்பட நேரிடும். செக்யூர் நவ் ஆராய்ச்சியின் படி, புற்றுநோய், பிரசவம் போன்ற மருத்துவ முறைகளின் செலவினம் விரைவிலேயே பாலிசியின் உச்சபட்ச வரம்பை எட்டிப்பிடிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
2. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சில நுகர்பொருட்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாக செலவினங்களை செலுத்த முடியாததாக பட்டியலிட்டுள்ளன. மருத்துவமனை பில்லில் அவை இடம் பெறும் போது, அதற்கான செலவினத்தை பாலிசிதாரர் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து தான் செலுத்த வேண்டி வரும்.
3. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் பொதுவாக 30 நாட்களுக்கு முன்பு (மருத்துவமனைக்கு) மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 60 நாட்கள் வரையிலும், அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக 30 நாட்கள் வரையிலும் ஆகும் OPD (Outpatient Department) செலவுகளை உள்ளடக்கியது. அதனைத் தாண்டி ஆகும் செலவுகளை நோயாளி அல்லது பாலிசிதாரர் தான் செய்தாக வேண்டும்.
also read : முதியோர்களுக்கு ஏற்ற சிறந்த திட்டம்...மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம், தகுதி மற்றும் பல தகவல்கள்..
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது, பாலிசிதாரர் தரப்பில் இருந்து செலவினம் ஏதுமில்லை அல்லது குறைவான செலவினம் மட்டுமே உள்ளது என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
ஹெல்த் இன்சூரன்ஸ் அளவை தீர்மானிக்க நிலையான விதி எதுவும் இல்லை. நீங்கள் வசிக்கும் நகரம், மருத்துவமனையின் வகை, முந்தைய மருத்துவ சிகிச்சை வரலாறு அடிப்படையில், கவரேஜ் அளவைத் தீர்மானிக்கலாம். “ஒருவரால் அதிக பிரீமியத்தை வாங்க முடிந்தால், அதிக காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மெட்ரோ நகரங்களில், 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என்கிறார் மேத்தா.
also read : புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளது?
பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் மருத்துவமனையின் நிர்வாக செலவுகள் மற்றும் நுகர்பொருட்களுக்கான செலவினங்களை ஏற்காது. இதுபோன்ற சமயத்தில் சிறிய அளவிலான இன்சூரன்ஸ் ஆட்-அன்களைப் (Add-on) பயன்படுத்தி அந்த செலவுகளை நிர்வகிக்கலாம்.
மருத்துவர் ஆலோசனைகள், நோயறிதல் சோதனைகள், மருந்தக செலவுகள் போன்றவற்றைக் காப்பீடு செய்யும் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் OPD திட்டங்களில் உள்ளன. மேலும் அறை வாடகையுடன், மருத்துவக் கட்டணங்கள், ICU கட்டணங்கள் ஆகியவையும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் அடங்கும் என்றாலும், நீங்கள் எடுத்துள்ள பாலிசிக்கு தொகைக்கு ஏற்ற அறைகளில் தங்குவது மட்டுமே சரியானது ஆகும். நீங்கள் பாலிசி அளவை விட வாடகை அதிமான அறையில் தங்கினால், அதற்கான வித்தியாச தொகையை நீங்கள் செலுத்த வேண்டி வரலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.