• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 10 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1,464 அதிகரிப்பு..!

10 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1,464 அதிகரிப்பு..!

இந்நிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 109 ரூபாய் அதிகரித்து, 5013 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 109 ரூபாய் அதிகரித்து, 5013 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

  • Share this:
    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தங்கத்தின் மீது முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த காலம் எனவும் நகை வியாபாரிகள் ஆலோசனை வழங்குகின்றனர்.

    சர்வதேசப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,464 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

    சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து, 4,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு நேற்றை விட 168 ரூபாய் உயர்ந்து, 32,576 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 காசு குறைந்து, 52 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 52,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விற்பனை வெகுவாக சரிந்துள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆபரண தங்கத்தை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதால், நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. விலை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் மீது முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த காலம் எனவும் நகை வியாபாரிகள் ஆலோசனை வழங்குகின்றனர்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாகக் கூறும் கோவை தங்க நகை தயாரிப்பாளர் சங்கத்தினர், விலையேற்ற சூழ்நிலை மாறும் வரை, ஜிஎஸ்டி வரி குறைப்பை மத்திய அரசு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    கடந்த ஆண்டு 30,104 ரூபாய்க்கு சவரன் விற்பனை ஆன நிலையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 31,168 ரூபாயாக அதிகரித்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து, இன்று 32,576 ரூபாயாக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்று வணிகர்கள் கணித்துள்ளதால், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாங்கும் பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    Also see:

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: