Home /News /business /

#WeAreAmazon: Amazonல் விற்கும் லட்சக்கணக்கான சிறு தொழில் உரிமையாளர்களுடைய ஆற்றல் மிக்க மற்றும் ஊக்கம் அளிக்கும் கதைகளைக் கொண்டாடுவோம்.

#WeAreAmazon: Amazonல் விற்கும் லட்சக்கணக்கான சிறு தொழில் உரிமையாளர்களுடைய ஆற்றல் மிக்க மற்றும் ஊக்கம் அளிக்கும் கதைகளைக் கொண்டாடுவோம்.

அமேசான்

அமேசான்

2020-21 எல்லாருக்கும் கடினமாக இருந்துவந்துள்ளது, சிறு தொழில்களுக்கும்தான். பல தொடக்க நிலை நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மற்றும் மறுவிற்பனையாளர்கள் கடையைத் திறந்துவைக்கவே தடுமாறினார்கள், வரவுக்கும் செலவுக்கும் பொருந்தாமல் திணறினார்கள்.

மேலும் படிக்கவும் ...
  2020-21 எல்லாருக்கும் கடினமாக இருந்துவந்துள்ளது, சிறு தொழில்களுக்கும்தான். பல தொடக்க நிலை நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மற்றும் மறுவிற்பனையாளர்கள் கடையைத் திறந்துவைக்கவே தடுமாறினார்கள், வரவுக்கும் செலவுக்கும் பொருந்தாமல் திணறினார்கள். எனினும், கடினமான நேரங்கள் என்பவை ஊக்கம் மற்றும் மீள்திறனின் உண்மையான கதைகளைப் பிறப்பிக்கின்றன என்று நமக்குச் சொல்கிறது Amazonன் 9 லட்சம்+ சிறு தொழில் மற்றும் தொழில்முனைவோருடைய வலைப்பின்னல். நோய்ப்பரவலுக்கு நடுவில் முதன்முறையாக இணையத்தில் விற்கத் தொடங்கிய திரிபுரா கைவினைக் கலைஞர்களில் தொடங்கி, எல்லைகளைக் கடந்து சென்று ஊட்டச்சத்துச் சாறுகள், கற்றுத்தரும் பொம்மைகளை விற்கும் பெண் தொழில் உரிமையாளர்கள்வரை Amazonன் சிறு தொழில் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடைய ஒட்டுமொத்த வலைப்பின்னல் ஆற்றல் மிக்கதாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் உள்ளது.

  புத்தாயிர மக்களுடைய விருப்பங்களுக்கேற்பச் சேவை புரியும் பரிசு அளித்தல் கடை ஒன்றை நடத்தும் தொழில் உரிமையாளர் இஷான் சோனியிடம் பேசுவோம், Amazonஉடன் இணைந்து பணியாற்றுவது எந்த அளவு சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும் என்று இவர் விளக்குகிறார். தில்லி முழுவதும் பல கிளைகளுக்கு உரிமையாளரான இஷான், “முடக்கம் திறக்கப்பட்டபிறகு, முதல் மூன்று மாதங்களில் வட இந்தியாவுக்கு 25% பேர்தான் வந்தார்கள். மக்களுக்குத் தேவைப்படும் அடிப்படைப் பொருட்களில் இல்லாத எங்களைப் போன்ற சிறு தொழில்களுக்கு, இணையத்துக்கு வெளியில்மட்டும் விற்பது ஒரு பெரிய சவாலாக ஆனது" என்கிறார் நம்மிடம்.

  இதனால், சோனி Amazonல் தன்னுடைய மின் வணிகப் பயணத்தைத் தொடங்கும் கட்டாயம் வந்தது, அது விரைவில் ஒரு மிகச் சிறந்த வியப்பாக மாறியது. கடையில் ஆர்டர்கள் மிகுதியான அதே நேரத்தில், “இணையத்தில் வரவேற்பு மிகச் சிறப்பாக இருந்தது. பாண்டிச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலிருந்தெல்லாம் எங்களுக்கு ஆர்டர்கள் வந்தன" என்கிறார் இவர். இப்போதும், இணையத்துக்கு வெளியிலான கடைதான் சோனியுடைய முதன்மை விற்பனை மூலமாக இருந்தபோதும், இணையம், இணையத்துக்கு வெளியில் ஆகிய இரு இடங்களிலும் விற்கிற கூட்டணிதான் தொலைநோக்கில் தன்னுடைய தொழிலுக்குக் கூடுதல் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று சோனி நம்புகிறார்.  ஆனால், இணையம்/இணையம் இல்லாதது ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் இந்தச் செயல்திறன் மிக்க செயல்பாட்டின் வழியாகச் சோனியைப்போல் பலன் பெற்றவர்கள், மீண்டு வந்தவர்கள் பலர். முகம்மது சித்திக்கின் தொழில், இன்வர்ட்டர் பேட்டரி (மின்கலன்) என்ற ஒரு முக்கியமான பொருளைச் சில்லறை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகிறது. இவர் இணையத்தில் விற்கத் தொடங்குவதுபற்றித் தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் இருந்தார். ஆனால், முந்தைய இரண்டு ஆண்டுகளில் நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஏதும் செய்யாமல் இருப்பது அவர் கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. "Amazon உடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியபிறகு, நாங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து ஆர்டர்களைப் பார்க்கத் தொடங்கினோம், இது மாதம்முழுவதும் தொடர்ந்தது. இப்போது, நாங்கள் கடை விற்பனையைமட்டும் சார்ந்து இருப்பதில்லை." Amazonன் மிகப் பெரிய வலைப்பின்னல், புதுமையான விற்கும் தெரிவுகள் ஆகியவற்றால் அவருடைய தொழில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்தது, இதனால், சித்திக் தன்னுடைய இணையத்துக்கு வெளியிலான கடையை மீண்டும் முழு வலுமையுடன் தொடங்க இயன்றது.  ஆனால், சில தொழில்களுடைய பலன்கள் சிறு எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். மிகவும் மாறுபட்ட ஒரு வழியில் அவசியமாக இருக்கும், அந்தத் தொழில்களின் கதை என்ன? அஷ்வினி மலானி 2014ல் தன்னுடைய நிறுவனத்தைத் தொடங்கினார். விளையாட்டின் வழியாகக் கல்வியை வழங்குவது, இளம் மாணவர்கள் சிறந்து விளங்கும்படி செய்வது ஆகிய நோக்கங்களுடன் அவர் தன் தொழிலைத் தொடங்கினார். குழந்தைகள் விளையாடக்கூடிய, அதே நேரம் கற்றுக்கொள்ளவும் இயலுகிற வடிவமைக்கப்பட்ட பொம்மைகளை அவர் தயாரித்தார். ஆனால், இந்தத் தனித்துவத்தால், அவருடைய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அவர் இணையத்துக்கு வெளியில் நடக்கும் விற்பனையைமட்டும் நம்பியிருந்தார். ஆனால், ஒட்டுமொத்த நாடும் நோய்ப்பரவலால் உறைந்து நிற்கும்போது, தன்னுடைய விற்பனை “பூஜ்ஜியத்துக்குச் சென்றுவிட்டது" என்கிறார் மலானி. இந்த நேரத்தில்தான் அவருக்கு அந்த யோசனை வந்தது, இணையத்துக்குச் செல்வதுதான் தன்னுடைய தொழிலுக்கும் தன்னுடைய பணியாளர்களுக்கும் சிறந்த நடவடிக்கை என்று தீர்மானித்தார்.

  Amazon உதவியுடன் STEPS TO DO நிறுவனம் மீண்டு வந்தது. அத்துடன், “இனி பின்னடைவு இல்லை. அது உறுதி. நீங்கள் சிறு தொழில் வைத்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் வீட்டிலிருந்து எதையோ நடத்துகிறீர்கள் என்றால், உங்கள் தொழில் திட்டத்தில் Amazonம் இருக்கவேண்டும்" என்கிறார் அஷ்வினி.  இந்த விற்பனையாளர்களில் ஒவ்வொருவரும், இதேபோன்ற கதையைக் கொண்ட ஆயிரக்கணக்கான மற்றவர்களைப் பிரதிபலிக்கிறார்கள், இவர்கள் அனைவரும் Amazon வழியாக விற்பதன் ஆதரவு, வலைப்பின்னல் மற்றும் சந்தைப்படுத்தல் வலிமைக்கு உறுதி கூற விரும்புகிறார்கள். சிறு இந்திய வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடைய ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ப்பதன்மூலம், இது சிறு நிறுவனங்களுக்கான வளர்ச்சிக்கு மிகச் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது, எதிர்வரும் ஆண்டில் அவர்கள் வெற்றிகரமாகத் திரும்பி வர உதவுகிறது.

  நீங்கள் Amazon வெற்றி வட்டத்தில் இடம்பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

  தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பயன்படுத்திக்கொள்வதற்கான ஒரு மிகப் பெரிய வலைப்பின்னலைக் கொண்டுள்ள Amazon இந்தியா, எப்போதும் மாறிக்கொண்டிருக்கிற, போட்டி மிகுந்த சந்தையில் சிறு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய இலக்குகளை எட்டுவதற்கு உதவுகிறது. கடினமாக உழைக்கும் இந்தச் சிறு நிறுவனங்களுக்கு உதவுவதன்மூலம், அமேசான் இந்தியா முழுவதும் உள்ள கடைகளின் எல்லைக்கோடுகளை அழித்துவிட்டது, விற்பதற்கு ஒரு மிகச் சிறந்த தயாரிப்பு அல்லது சேவையை வைத்துள்ள யாரும் தங்கள் சொந்த வீடுகளில் இருந்து அதைச் செய்யலாம் என்பதைச் சாத்தியமாக்கிவிட்டது.

  நீங்கள் இணையத்தில் உங்கள் தொழில் பயணத்தைத் தொடங்க எண்ணுகிறீர்கள் என்றால், அதை எப்படித் தொடங்குவது என்று தெரிந்துகொள்ள, இந்த இணைப்பைக் க்ளிக் செய்யுங்கள். https://www.amazon.in/b?node=20172002031&ld=SMINSOApartner&fbclid=IwAR0SrECWx5xGxo_pOriAYstyzGSWOZIphgJokgr98NAsSj75fvefzF5b0xg

  இது கூட்டாளர் பதிவு.

   
  Published by:Murugesh M
  First published:

  Tags: Amazon

  அடுத்த செய்தி