• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • WazirX நாட்டின் முதல் கிரிப்டோ வெளிப்படைத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது

WazirX நாட்டின் முதல் கிரிப்டோ வெளிப்படைத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது

File

File

தெளிவான உண்மைகள் மூலம் பங்குதாரர்களிடையே நம்பிக்கையை வளர்க்க நாட்டின் முதல் கிரிப்டோ வெளிப்படைத்தன்மை அறிக்கையை WazirX வெளியிட்டுள்ளது.

  • Share this:
    அனைவருக்கும் கிரிப்டோகரன்சி பற்றிய ஆர்வம் தற்போது அதிகரித்து உள்ளது, ஆனால் பலருக்கு இந்த புதிய நாணய முறையைப் பற்றி அச்சங்களும் தவறான எண்ணங்களும் உள்ளன. WazirX Cryptocurrency அறிக்கையானது, அத்தகைய எண்ணங்களை தெளிப்படுத்தும் விதமாக வெளிப்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    கிரிப்டோ பரிவர்த்தனை ஈடுபடும் முதலீட்டாளர்கள், கொள்கை கோட்பாளர்கள் மற்றும் நிறுவன பங்குதாரர்கள் அச்சமூட்டும் கட்டுக்கதைகளையும், தவ்றான புரிதல்களையும் விளக்கி, நிபுணர்களின் ஆலோசனைகளோடு கிரிப்டோ வெளிப்படைத்தன்மை அறிக்கையை வாசிர்எக்ஸ் வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் தொழில்துறையை மேம்படுத்த இதுபோன்ற முயற்சிகளை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை இந்த அறிக்கை விளக்கும் என்று நம்பப்படுகிறது.

    ஏப்ரல் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை 14,469 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதில், 90% கணக்குகள் பயனரே மூடுமாறு கோரிக்கை விடுத்ததால் முடக்கப்பட்டது மற்றும் 10% சட்டக் குழுவால் முடக்கப்பட்டது. அதாவது அவர்கள் பணம் செலுத்துவதில் உள்ள பிரச்னை அல்லது சட்ட வழக்குகள் காரணமாக கணக்குகளை முடக்க வேண்டியிருந்தது என்று வாசிர்எக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

    சட்ட அமலாக்க முகமைகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளுக்கான தீர்வு காணப்பட்ட விகிதம் 100% ஆகும். மொத்தம் வந்த 377 கோரிக்கைகளில், 38 கோரிக்கைகள் வெளிநாட்டு முகமைகளிடம் இருந்து வந்தவை என வாசிர்எக்ஸ் தெரிவித்துள்ளது.

    தற்போது, ​​கிரிப்டோ பரிவர்த்தனையில் ஈடுபடும் மொத்த பயனர் எண்ணிக்கை 8.5 மில்லியனாக உள்ளது. ஜனவரி 2021 முதல் மொத்த வர்த்தக அளவு $ 30 பில்லியன் ஆகும்.

    தவறான KYC அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் பயனர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தொடர்புடைய சட்ட அமலாக்க முகமை நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

    வாசிர்எக்ஸ் பொதுக் கொள்கை இயக்குனர் அரித்ரா சார்கெல் கூறும்போது, " இந்த அறிக்கை இந்தியாவில் கிரிப்டோவைப்பற்றிய தெளிவை பயனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்குவடஹ்ற்கும் , வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்குமான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: