முகப்பு /செய்தி /வணிகம் / ஆன்லைனில் வாகன ஓனர்ஷிப்பை மாற்றுவது எப்படி..?

ஆன்லைனில் வாகன ஓனர்ஷிப்பை மாற்றுவது எப்படி..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பழைய வாகனங்களை வாங்கும் போது வாகன உரிமையாளர் பெயர் மாற்றத்தை நாமே ஆன்லைனில் மேற்கொள்ளலாம். அது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்…

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இணைய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உண்மையில் உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. நாம் இருந்த இடத்தில் இருந்தபடியே நாம் நினைப்பதைப் சாதித்துக் கொள்ளலாம்.

ஒரு காலத்தில் அரசு அலுவலகங்களுக்குச் சென்று மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று ஆவணங்களைப் பெற்று வந்தோம். ஆனால் இப்போது அரசின் அனைத்து துறைகளும் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் அரசு அலுவலகங்களுக்கு ஆவணங்கள் தொடர்பாக செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது.

Read More : ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு மேல்... யார் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்

அந்த வகையில் தற்போது போக்குவரத்துத் துறை தொடர்பான ஆவணங்கள் பலவும் ஆன்லைனிலேயே பெற முடியும். அதில் ஒன்று தான் வாகன உரிமையாளரின் பெயரை மாற்றும் சேவை.

பழைய வாகனங்கள் நாம் வாங்கினால் வாகன உரிமையை நமது பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டியது சட்டப்பூர்வமான கட்டாயம். இதற்காக ஆர்டிஓ இடைத்தரகர்களை நாட வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது ஆன்லைன் மூலம் நாமே வாகன உரிமையாளர் பெயரை(ஆர்.சி.புக்) மாற்றிக் கொள்ளலாம். மிகவும் எளிதாக எப்படி இதைச் செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

முதலில் Parivahan என்ற இணைய தளத்திற்குச் சென்று நமக்கான அக்கவுண்ட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
‘Online Services’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து ‘Vehicle Related Services’-ஐ தேர்வு செய்து நமது மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
எஞ்சின் நம்பர், சேஸ் நம்பர் மற்றும் நமது வாகனத்தின் பதிவு எண்  உள்ளிட்ட வாகனம் தெடர்பான விபரங்களை பதிவிட வேண்டும். தொடர்ந்து வரும் அப்ளிகேஷன் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதைத் தொடர்ந்து வரும் பட்டியலில் நமக்கான விண்ணப்பம் எது என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு கட்டணம் தொடர்பான விபரங்கள் வரும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தொடர்ந்து வாகனம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிமையாளர் பெயர் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்.. 1. Form 28 2. Form 29 3. Form 30 4. Form 31 5. Form 35 6. வாகனத்தின் பதிவுச் சான்று (RC Book) 7. காப்பீட்டுச் சான்று (Insurance policy) 8. Pollution Certificate  9. முகவரிக்கான ஆவணம்
இவைகேளோடு  ஆதாரோடு இணைக்கப்பட்ட செல்போன் எண் போன்ற விபரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஓடிபி வரும். ஓடிபி எண்ணை பதிவிட்ட பிறகு உங்கள் வேலை முடிந்து விடும்.
ஒரு சில நாட்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய வாகன பதிவுச் சான்று உங்களுக்கு கிடைத்துவிடும். ஒன்று உங்களுக்கு தபால் மூலம் வந்து சேரும். அல்லது ஆர்டிஓ அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வரும்.
மாநிலத்திற்கு மாநிலம் நடைமுறையில் மாற்றம் இருக்கும். இந்த செயல்பாடுகளின் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்று நாம் பதிவேற்றம் செய்யும் அனைத்தின் நகல்களைம் Copy வைத்துக்கொள்வது.
First published:

Tags: Business, RTO officer