ஹோம் /நியூஸ் /வணிகம் /

போன் தொலைந்தால் உடனே இதை செய்யுங்க.. உங்க யூபிஐ பணத்தை காப்பாற்ற இதுதான் ஒரே வழி!

போன் தொலைந்தால் உடனே இதை செய்யுங்க.. உங்க யூபிஐ பணத்தை காப்பாற்ற இதுதான் ஒரே வழி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

யுபிஐ மூலம் செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகள் மட்டும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 9.83 லட்சம் கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 10.73 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

டிஜிட்டல் முறை பணம் பரிவர்த்தனைகள் உலகம் முழுவதும் மிகவும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. முக்கியமாக இந்தியாவில், டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிறகு அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு வருகின்றன. அதிலும் கொரோனா தொற்றுக்கு பிறகு யுபிஐ முறை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மிகவும் அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தன்னுடைய மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யுபிஐ மூலம் செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகள் மட்டும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 9.83 லட்சம் கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 10.73 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. யுபிஐ பண முறையில் பணப் பரிமாற்றம் செய்வது மிக எளிமையாக இருந்தாலும் அதுவே சில நேரங்களில் பல பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது. அதில் முக்கியமானது உங்களது மொபைல் தொலைந்து போவது. நீங்கள் யுபிஐ பயன்படுத்தும் மொபைல் தொலைந்து போய்விட்டால் உங்களது யுபிஐ அக்கவுண்ட்டை உடனடியாக லாக் செய்ய வேண்டும் அப்போது தான் உங்கள் அக்கவுண்டை உங்களது அனுமதி இன்றி யாரும் பயன்படுத்தி பண பரிவர்த்தனையை செய்ய முடியாது. அந்த வகையில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் யுபிஐ செயலிகளான ஃபோன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆகியவற்றில் எவ்வாறு அக்கவுண்ட்டை லாக் செய்வது என்பதை பற்றி கூறு பார்ப்போம்.

Read More : ஆன்லைனில் ஷாப்பிங்கில் அதிகரிக்கும் மோசடிகளும்.. தடுக்கும் வழிமுறைகளும் - முழு விபரம்!

ஃபோன் பே (PhonePe) அக்கவுண்டிங் பிளாக் செய்வதற்கான படிமுறைகள்:

 • 08068727374 என்று உதவி எண்ணிற்கு கால் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
 • Phonepe பதிவு செய்து மொபைல் நம்பர், இமெயில் ஐடி, கடைசியாக நீங்கள் செய்த பண பரிவர்த்தனை, அதன் மதிப்பு என்னென்ன வங்கிகளின் கணக்குகள் இணைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் மாற்று மொபைல் எண் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்
 • இவை அனைத்தையும் சேவை அதிகாரி உறுதி செய்து கொண்டவுடன், உங்களது அக்கௌன்ட் உடனடியாக தற்காலிகமாக பிளாக் செய்யப்படும்.

பேடிஎம் (Paytm) அக்கவுண்டை பிளாக் செய்வது எப்படி?

 • 0120 - 4456456 என்ற உதவி மையத்திற்கு கால் செய்து பிரச்சனையை தெரிவிக்க வேண்டும்.
 • இதற்கு முன்னதாக உங்களது சிம் கார்டை பிளாக் செய்வது அவசியமானது.
 • பிறகு paytm உள்ள report loss or unauthorized usage of wallet, debit card or savings account என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
 • அதில் lost phone என்ற ஆப்ஷனை தேர்வு செய்து மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
 • Block Paytm account என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

கூகுள் பே (google pay) அக்கவுண்ட் பிளாக் செய்வதற்கான வழிமுறைகள்:

 • 1800 419 0157 என்ற இலவச உதவி மைய எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
 • வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் உங்களது அனைத்து விவரங்களையும் கொடுத்து உங்களது அக்கவுண்டை பிளாக் செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Bank, Online Transaction, Technology, UPI