சரியான முறையில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும் அதே நேரம், அவற்றை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவது தேவையற்ற கடன் சுமையை தலையில் ஏற்றி விடும். தற்போது பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தங்கள் செலவுகளை நிர்வகிக்கிறார்கள். இவர்களுக்கு மாதாமாதம் பல கிரெடிட் கார்டுகளின் பில்களின் டியூ டேட்ஸ்களை கண்காணிப்பது மிகவும் கடினமான ஒருவேலையாக இருக்கும்.
இதனால் கிரெடிட் கார்டு பில் பேமெண்ட் செலுத்த வேண்டிய கடைசி தேதியை எளிதாக மறந்து விடுவார்கள். தாமதமாக கிரெடிட் கார்டு பில் செலுத்துவதால் சிபில் ஸ்கோர் பாதிப்பு, செலுத்த வேண்டிய தொகைக்கான வட்டியுடன் தாமத கட்டணம், குறைவான கிரெடிட் லிமிட் உள்ளிட்ட பல விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் உங்களால் சரியான தேதியில் கிரெடிட் கார்டு பில்-ஐ செலுத்த முடியாவிட்டால் பதற்றம் அடைய வேண்டாம். ஏனென்றால் பணம் செலுத்தத் தவறியதிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகுதான் தாமதமாக பேமென்ட் செய்வதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட Credit Card and Debit Card – Issuance and Conduct Directions, 2022 வழிமுறைகளில், லேட் பேமென்ட் சார்ஜஸ் மற்றும் பிற தொடர்புடைய கட்டணங்கள் ஏதேனும் இருந்தால் ஒரு கிரெடிட் கார்டு அக்கவுண்ட் செலுத்த தவறிய உரிய தேதியிலிருந்து 3 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கும்போது மட்டுமே, கடன் தகவல் நிறுவனங்களுக்கு வழங்கும் அறிக்கையில் 'பாஸ்ட் டியூ'('past due) என்று குறிப்பிட வேண்டும் மற்றும் அபராத கட்டணங்கள் விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழிமுறை அமலில் இருப்பதால் நீங்கள் உங்கள் கிரெடிட் பேமெண்ட் செய்ய வேண்டிய தேதியை நீங்கள் தவறவிட்டால், குறிப்பிட்ட கடைசி தேதியிலிருந்து 3 நாட்களுக்குள் நீங்கள் பணம் செலுத்தி கொள்ளலாம். மேலும் லேட் பேமெண்ட் அபராதத்தையும் தவிர்த்து கொள்ளலாம். கூடுதலாக உள்ள 3 நாட்களுக்குள் செலுத்திவிட்டால் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படாது.
Read More : உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம்!
லேட் பேமென்ட் சார்ஜ்:
குறிப்பிட்ட காலக்கெடு தாண்டி நீங்கள் பேமெண்ட் செய்யாமல் இன்னும் தாமதமாக செய்தால் அதற்கான அபராத கட்டணம் விதிக்கப்படும். பொதுவாக இந்த அபராதம் உங்கள் அடுத்த மாத பில்லிங் சைக்கிளில் சேர்க்கப்படும். நீங்கள் எந்த வங்கி அல்லது நிறுவனத்தின் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்களோ அவர்கள் தாமதமாக செலுத்தும் பேமெண்டிற்கான அபராத கட்டணம் எவ்வளவு என்பதை தீர்மானிக்கிறார்கள். பில் தொகை அதிகமாக இருந்தால், தாமதமாக செலுத்தும் பேமெண்டிற்கான அபராத கட்டணமும் அதிகமாகவே இருக்கும்.
உதாரணமாக எஸ்பிஐ வங்கியானது பேமெண்ட் பில் ரூ.500-க்கு அதிகமாக மற்றும் ரூ.1,000-க்கு குறைவாக இருந்தால் லேட் பேமெண்டிற்கு ரூ.400 அபராத தொகை விதிக்கிறது. ரூ.1,000 - ரூ.10,000 வரையிலான டியூவிற்கு ரூ.750, ரூ.10,000 - ரூ.25,000 வரையிலான டியூவிற்கு ரூ.950, ரூ.25,000 - ரூ.50,000 வரையிலான டியூவிற்கு ரூ.1,100, ரூ.50,000-க்கு மேல் உள்ளடியூ தொகைக்கு ரூ.1,300 லேட் பேமெண்டிற்கான அபராதமாக வசூலிக்கிறது. அபராத வட்டி, தாமதமாக செலுத்தும் கட்டணங்கள் மற்றும் பிற தொடர்புடைய கட்டணங்கள் நிலுவை தேதிக்கு பிறகு பாக்கி செலுத்தாமல் உள்ள தொகைக்கு மட்டுமே விதிக்கப்படும், மொத்த தொகைக்கு அல்ல என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிபுணர்களின் அறிவுறுத்தல்:
எமெர்ஜென்சி அல்லது நிதி நெருக்கடிகள் இல்லாவிட்டால் உரிய நேரத்தில் நிலுவை தொகையை செலுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பைசாபஜாரின் வணிகத் தலைவர் சச்சின் வாசுதேவா கூறுகையில், கார்ட் ஹோல்டர்கள் கிரெடிட் கார்டு பில் நிலுவை தேதியைத் தவறவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடலாம். நிலுவை தொகையை முழுமையாக செலுத்தும் வரை கிரெடிட் கார்டின் முக்கிய நன்மையான வட்டி இல்லாத காலம் பாதிக்கப்படும் என்கிறார்.
பேங்க்பஜார்.காம்-இன் சிஇஓ பங்கஜ் பேசுகையில், உங்கள் கிரெடிட் ஸ்கோரில் ஏற்படும் பெரிய தாக்கம் உங்கள் கிரெடிட் அக்கவுன்ட்டின் கிரெடிட் ரிப்போர்ட்டிலும் பிரதிபலிக்கும்.இதனால் உங்கள் கடன் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகும் என்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Loan, Business, Credit Card