ஹோம் /நியூஸ் /வணிகம் /

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு செய்ய எப்படி பல வழிகள் இருக்கிறதோ அப்படி தான் அதனை சேமிக்கவும் வழிகள் இருக்கின்றன. ஆனால் நமது கண்களுக்கு தான் அவை பல நேரங்களில் புலப்படுவது இல்லை. அந்த வகையில் ஒரு சிறந்த வழி தான் போஸ்ட் ஆஃபிஸ்.

நம்மில் பலருக்கு போஸ்ட் ஆஃபிஸில் அக்கவுண்ட் இருந்து அதில் பணம் கட்டாமல் இருப்போம் அதற்கு முதல் காரணம் போஸ்ட் ஆஃபிஸ் செல்ல நேரம் இல்லை என்பதாக கூட இருக்கலாம். பணத்தை செலவு செய்ய நாம் செலவிடும் நேரத்தை பணத்தை சேமிப்பதில் கொடுக்கிறோமா என்றால் கேள்விக்குறி தான். நாம் போஸ்ட் ஆஃபிஸ் சென்று பணம் போடுவதற்குள் கையில் இருக்கும் பணம் ஏதாவது ஒரு வழியில் செலவு ஆகிவிடும்.

Read More : மாதம் ரூ.1000 செலுத்தினால் ரூ.15 லட்சம் கிடைக்கும்... பெண் குழந்தைக்கான சிறந்த சேமிப்பு திட்டம்

இப்படி இருக்கையில் போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம்.

இனி உங்கள் அஞ்சல் கணக்குகள் சுலபமாக online வாயிலாக கீழ்க்காணும் ஒரு வழிகளில் பண பரிவர்த்தனை செய்யலாம்.

1. NEFT மூலம் எந்த ஒரு வங்கி கணக்கில் இருந்து உங்களதுSB, SSA, PPF கணக்கிற்கு சுலபமாக பணம் பரிமாற்றம் செய்யலாம். (IFSC Code - IPOS0000DOP )
2. IPPB (India post payment bank) கணக்கு மூலமாகவும் உங்கள் SSA, PPF, RD, PLI, RPLI கணக்குகளுக்கு பண பரிவர்த்தனை சுலபமாக PPB app மூலம் செய்யலாம். (IPPB கணக்கு துவங்க உங்கள் postman தொடர்பு கொள்ளவும்).
3.POSB இன் mobile banking மாற்றும் internet banking மூலம் உங்களது அனைத்து கணக்குகளையும் நீங்களே நிர்வகிக்க முடியும். (SB, SSA, PPF, RD,PLI,RPLI, TD, NSC,KVP)
4. அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு ATM card வசதி உள்ளது.
First published:

Tags: Online, Post Office, Savings