ஹோம் /நியூஸ் /வணிகம் /

அடிதூள்! இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்ய இதை செய்தால் போதும்..

அடிதூள்! இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்ய இதை செய்தால் போதும்..

அடிதூள்! இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்ய இதை செய்தால் போதும்..

அடிதூள்! இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்ய இதை செய்தால் போதும்..

Netflix Subscription | நீங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சர்விஸின் புதிய சப்ஸ்கிரைபராக இருந்தால், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற இலவச OTT சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் சில நன்மைகளையும் பெறலாம். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் அதன் ஸ்ட்ரீமிங் சேவையை 2 ஏர்டெல்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலக அளவில் மிக பிரபலமாக உள்ளது ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ். இதில் ரிலீஸ் செய்யப்படும் வெப் சீரிஸ்கள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகின்றன. இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் பிளானை இலவசமாக ஆக்டிவேட் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா.!

ஆம், நீங்கள் இலவச Netflix சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்யலாம். ஆனால் அதற்காக முதலில் நீங்கள் இந்த ஏர்டெல் பிளான் ஒன்றை பெற வேண்டும். டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது புதிய போஸ்ட்பெய்ட் யூஸர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது. நீங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சர்விஸின் புதிய சப்ஸ்கிரைபராக இருந்தால், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற இலவச OTT சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் சில நன்மைகளையும் பெறலாம். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் அதன் ஸ்ட்ரீமிங் சேவையை 2 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளான்களுடன் இணைந்து யூஸர்களுக்கு அதன் சேவையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியது.

இந்த புதிய சலுகையின் கீழ் புதிய ஏர்டெல் போஸ்ட்பெய்ட் யூஸர்கள் Netflix-ல் பேசிக் மற்றும் ஸ்டாண்டர்ட் சப்ஸ்கிரிப்ஷன்களை பெறலாம். மேலும் The Fame Game, Space Force, Squid Game, Money Heist, Inventing Anna போன்ற பிரபலமான சீரிஸ்களையும் பார்த்து மகிழ முடியும். ஏர்டெல் போஸ்ட்பெய்டு ஃபேமிலி பிளான் விவரங்களையும், இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாக ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதையும் இங்கே பார்க்கலாம்..

Read More : யூடியூபில் நீளமான வீடியோவை பார்க்க பிடிக்கவில்லையா? அதில் சிறந்த பகுதி எது என்பதை யூடியூப்பே கூறுகிறது!

இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனுடன் தொகுக்கப்பட்டுள்ள ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பிளான்:

இலவச Netflix சப்ஸ்கிரிப்ஷன் வழங்கும் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளான்களின் விலை ரூ.1,199 மற்றும் ரூ.1,599-ஆக இருக்கிறது. இதில் ரூ.1,199 பிளான் Netflix-ன் பேசிக் பிளான் அக்சஸை வழங்குகிறது, மேலும் 2 ஃபேமிலி ஆட்-ஆன் கனெக்ஷன்ஸ், மாதத்திற்கு 150GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது.

மறுபுறம் ரூ.1,599 போஸ்ட்பெய்ட் திட்டமானது Netflix ஸ்டாண்டர்ட் பிளான் அக்சஸை வழங்குகிறது. மேலும் 3 ஃபேமிலி ஆட்-ஆன் கனெக்ஷன்ஸ், மாதத்திற்கு 250GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது. இந்த 2 பிளான்களுமே ஒரு வருட அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகின்றன. ஏர்டெல் போஸ்ட்பெய்டு ஃபேமிலி பிளானைதேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை எவ்வாறு ஆக்டிவேட்/கிளைம் செய்யலாம் என்பது இங்கே...

Cinema tickets are free if you subscribe to the Emotional Entertainment Network OTT site, OTT platform, amazon prime, netflix movies, ott web series, web series, disney plus hotstar, ray anthology movie, அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் திரைப்படங்கள், ஓடிடி வலைத் தொடர், வலைத் தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், Emotional Entertainment Network, Emotional Entertainment Network site, எமோஷனல் எண்டெர்டெயின்மெண்ட் நெட்வொர்க்
ஓடிடி

Airtel Thanks app-ஐ பயன்படுத்தி ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பிளான்களில் இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்யலாம்.

* ஏர்டெல் வெப்சைட்டிற்கு சென்றோ அல்லது Airtel Thanks app-ஐ உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்தோ ஏர்டெல் நெட்ஃபிளிக்ஸ் தொகுப்பிற்கு அப்கிரேட் செய்யவும்.

* இப்போது Airtel Thanks app-ல் கிடைக்கும் Discover Thanks Benefit பேஜ்ஜிற்கு செலலவும்

* Enjoy your rewards செக்ஷனுக்கு சென்று நெட்ஃபிளிக்ஸ் Tab-ற்க்கு கீழே ஸ்க்ரால் செய்யவும்

* அடுத்து Netflix வெப்சைட்டிற்கு சென்று Claim-ஐ டேப் செய்து பின் உங்கள் மொபைல் நம்பரை பதிவுசெய்து பாஸ்வேர்டை செட்டப் செய்வதன் மூலம் ஆக்டிவேஷன் ப்ராசஸை முடிக்கவும்.

* இந்த செயல்முறை முடிந்ததும் நீங்கள் இந்த சர்விஸை பயன்படுத்த தயாராகிவிடுவீர்கள்.

SMS வழியே ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பிளான்களில் நெட்ஃபிளிக்ஸ் ஆக்டிவேட் செய்வது எப்படி.?

* ஏர்டெல் நெட்ஃபிளிக்ஸ் பண்டில் பிளானிற்கு மேம்படுத்திய பிறகு, பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரில் இன்பாக்ஸை சரிபார்க்கவும். ஆக்டிவேஷன் லிங்குடன் கூடிய SMS-ஐ காண்பீர்கள்.

* நெட்ஃபிளிக்ஸ் வெப்சைட்டிற்கு செல்ல லிங்கை டேப் சேர்த்து ஆக்டிவேஷனை முடிக்கவும்.

First published:

Tags: Airtel, Netflix, Technology