முகப்பு /செய்தி /வணிகம் / டைம், எனர்ஜி, பணம் எல்லாமே வேஸ்ட் - எலான் மஸ்க்கை விமர்சித்த ஆனந்த் மகேந்திரா

டைம், எனர்ஜி, பணம் எல்லாமே வேஸ்ட் - எலான் மஸ்க்கை விமர்சித்த ஆனந்த் மகேந்திரா

எலான் மஸ்க்கை விமர்சித்த ஆனந்த் மகேந்திரா

எலான் மஸ்க்கை விமர்சித்த ஆனந்த் மகேந்திரா

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்த நடவடிக்கையை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் செயல்பாட்டை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் சிஇஓவாக இருந்து வருகிறார்.

எலக்ட்ரிக் வாகனத்துறையில் டெஸ்லா நிறுவனமும், வின்வெளித்துறையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தி வருகின்றன. இந்நிலையில், முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மாபெரும் தொகை கொடுத்து வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இதற்காக ட்விட்டர் நிறுவனத்திடம் ஒப்பந்தமும் மேற்கொண்டார்.

இந்த ஒப்பந்ததை செயல்படுத்தி ட்விட்டர் நிறுவனத்தை தனதாக்கும் செயலை முடிப்பதற்கு முன்னதாகவே தனது முயற்சியில் இருந்து பின்வாங்கி டீலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குகிறேன் என யாரும் எதிர்பாராத விதமாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தாரோ, அதேபோல் ஒப்பந்தம் ரத்தாகிறது என மஸ்க் கூறியிருப்பதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒப்பந்தத்தை இவ்வாறு ரத்து செய்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது.

இதையும் படிங்க: ரிஷி சுனக் மட்டும் பிரதமராகக் கூடாது.. கங்கணம் கட்டிக்கொண்டு பரப்புரை செய்யும் போரிஸ் ஜான்சன்

பலரும் எலான் மஸ்க்கின் இது போன்ற அதிரடி செயல்பாடுகளை விமர்சித்து வரும் நிலையில், மகேந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திராவும் எலான் மஸ்க்கின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், எலான் மஸ்க்கின் இந்த செயல் நேரத்தை, ஆற்றலை, பணத்தை வீணடித்துள்ளது. செய்திக்கும், தொடர்புக்கும் ஆதாரமாக ட்விட்டர் நிறுவனம் விளங்குகிறது. இந்த நிறுவனத்தை சிறந்த குழு மூலம் ஒரு சமூக அமைப்பாக பொறுப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் எலான் மஸ்க்கின் நடவடிக்கைகள் பொறுப்பற்ற தன்மையாக உள்ளது என ஆனந்த் மகேந்திரா விமர்சித்துள்ளார். ட்விட்டரில் பல போலி கணக்குகள் உள்ளதாகவும், அதன் உண்மையான புள்ளி விவரத்தை ட்விட்டர் நிறுவனம் தர வேண்டும் எனவும் எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தார். இது தான் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக முக்கிய காரணமாக அமைந்ததாக எலான் மஸ்க் கூறுகிறார்.

First published:

Tags: Anand Mahindra, Elon Musk