பிஎப் கணக்கில் உள்ள பணத்தை புதிய நிறுவன கணக்கிற்கு ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி!

பிஎப் கணக்கில் உள்ள பணத்தை புதிய நிறுவன கணக்கிற்கு ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

ஊழியர்கள் பெற்றுவந்த பிஎப் பணத்தை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்றைய காலகட்டத்தில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெறுவது என்பது இயலாத காரியமாகி உள்ளது. இதனால் ஊழியர்கள் பெற்றுவந்த பிஎப் பணத்தை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. தற்போது இதனை எளிதாக ஆன்லைனிலேயே மாற்றி கொள்ளும் வசதியை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈ.பி.எஃப்.ஓ) ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருக்கும் உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் உள்ள உங்கள் பிஎப் கணக்கிற்கு எப்படி ஆன்லைனில் பணத்தை மாற்றுவது என்பதை இப்போது பார்ப்போம்.

1 : www. https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற தளத்தில் உங்கள் யுஏஎன் நம்பரை பாஸ்வோர்டு போட்டு ஓபன் செய்ய வேண்டும்.

2. உங்கள் யுஏஎன் கணக்கு ஓபன் ஆன பிறகு 'Online Services' என்ற ஆப்சனை கிளக் செய்தால் அதில் 'One member - One EPF account என்று இருக்கும். அதை நீங்கள் திறக்க வேண்டும்

3. இப்போது புதிய விண்டோ ஓபன் ஆகும்.அதில் உங்களை பற்றி தனிப்பட்ட தகவல்கள் உங்கள் பிஎப் கணக்குகள் காட்டும். அதில் இப்போது நீங்கள் வேலை பார்க்கும் பிஎப் நம்பரை அளிக்க வேண்டும்

4. புதிய பிஎப் நம்பரை என்டர் செய்த பிறகு Get Details என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

5. தற்போதைய ஈபிஎஃப் கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டியதற்காக ஏற்கனவே வேலைபார்த்த நிறுவனத்தின் ஈபிஎஃப் கணக்கை தேர்ந்தெடுக்கவும்.

6. இறுதியாக நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும். அதை நீங்கள் என்டர் செய்தால் போதும். உங்களுக்கு டிராக்கிங் ஐடி தோன்றும். இந்த ஐடி மூலம் 'Track Claim Status' ஆப்சனில் சென்று உங்கள் கோரிக்கை நிலையை தெரிந்து கொள்ளலாம்.

7. உங்கள் கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்ட பின்னர், படிவம் 13-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் மூன்று மாதத்தில் உங்கள் புதிய பிஎப் கணக்கில் பழைய பணம் வந்து சேர்ந்துவிடும்.

Also read... உங்கள் பிஎஃப் பணத்தை எவ்வாறு எடுப்பது? முழு விவரம்!

பி.எஃப் தொகையை ஆன்லைனில் மாற்றுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

1. யுஏஎன் போர்ட்டலில் நீங்கள் உங்களது யுஏஎன் நம்பரை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்.

2. உங்கள் மொபைல் நம்பர் யுஏஎன் நம்பருடன் இணைந்திருக்க வேண்டும்.

2. வங்கி கணக்கு மற்றும் வங்கி IFSC குறியீடு UAN கணக்கில் பதிவு செய்யப்பட்டிருப்பது அவசியம்.

3. உங்களது கே.ஒய்.சி விதிமுறைகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.

4. EPFO-ல் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்கள் முந்தைய / தற்போதைய முதலாளியால் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

5. ஒரு ஊழியரின் முந்தைய மற்றும் தற்போதைய பி.எஃப் கணக்கு எண் ஈ.பி.எஃப்.ஓ போர்ட்டலில் உள்ளிடப்பட வேண்டும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: