Home /News /business /

உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை ரிவர்ஸ் செய்வது எப்படி?

உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை ரிவர்ஸ் செய்வது எப்படி?

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

சில நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டணமாக கழித்து மீதமுள்ள பணத்தை திருப்பித்தருவார்கள்

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று – ஒரே பரிவர்த்தனை இரண்டு முறை வசூலிக்கப்படுவது ஆகும். அதுவும், நீங்கள் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும்போது, ‘பரிவர்த்தனை தோல்வியுற்றது’ (Transaction failed) என்ற செய்தி உங்கள் மொபைல் திரையில் தோன்றி, நீங்கள் மீண்டும் கார்டு மூலம் பணம் செலுத்த முயற்சி செய்யும் போது, உங்கள் கார்டில் இரண்டு முறை பணம் வசூலிக்கப்பட்டு இருக்கும். இதை எப்படி ரிவர்ஸ் செய்வது? என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு இருக்கும்.

பெரும்பாலான இடங்களில், ‘பிளாஸ்டிக் பணம்’ எனப்படும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. கார்டுகள் பயன்பாடு சுலபமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் இருப்பதால், பலரும் ரொக்கமாக பணம் எடுப்பதற்கு பதிலாக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில், கார்டு பயன்படுத்தி பணம் செலுத்திய பின், அதை உடனே ரத்து செய்யவும் தயங்குவதில்லை. அதே போல, தொழில்நுட்ப கோளாறு காரணங்களுக்காக இரண்டு முறை உங்கள் கார்டு ‘சார்ஜ்’ செய்யப்படலாம். நீங்கள் கிரெடிட் கார்டு வழியே செலுத்திய பேமெண்ட்டை ரிவர்ஸ் செய்வது எப்படி என்பதற்கான உதாரணங்கள் இங்கே.

ஆன்லைன் பரிவர்த்தனைகள்:

அனைத்து இ-காமர்ஸ் வலைதளங்களிலும் கிரெடிட் கார்டுகள் பேமெண்ட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நீங்கள் ஒரு பொருளை அல்லது சேவையை கார்டு வழியே கட்டணம் செலுத்தி வாங்கி, அதை ரத்து செய்தால், நீங்கள் செலுத்திய முழு தொகையும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், இ-காமர்ஸ் வலைதளங்கள் பொறுத்தவரை, ரீஃபண்ட் (refund) என்று கூறப்படும் பணத்தை திரும்பப் பெறக்கூடிய கொள்கை வேறுபாடும். ஒரு சில வலைத்தளங்கள், முழு பணத்தையும் திருப்பித்தரும்.

சில நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டணமாக கழித்து மீதமுள்ள பணத்தை திருப்பித்தருவார்கள். சில வணிகங்கள், செலுத்திய பணத்தை திருப்பித்தராமல், ஆனால் அதே தொகைக்கு சமமான மதிப்புக்கு புள்ளிகளை வழங்குகிறார்கள். இதைப் பயன்படுத்தி, நீங்கள் அதே வலைதளத்தில் பொருட்களை வாங்கலாம். எனவே, ஆன்லைனில் ஏதேனும் வாங்குவதற்கு முன்பு, அதன் கட்டண விவரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்துப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

கிரெடிட் கார்டு இரண்டு முறை ஸ்வைப் செய்யப்படுவது :

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் சிக்கல்களில் மிகவும் பொதுவானது, இரண்டு முறை ஸ்வைப் செய்யப்படுவது. கிரெடிட் கார்டு மட்டுமின்றி, ஸ்வைப் மெஷினில் கார்டு பேமெண்ட் செலுத்தும்போது அனைவருக்குமே ஏற்படும்.

ஒரு முறை கார்டு ஸ்வைப் செய்யப்பட்டு, பணம் செலுத்தியதற்கான ரசீதை வரவில்லை என்பதற்காக இரண்டாவது முறை ஸ்வைப் செய்யப்படும் போது, இரண்டு முறை உங்கள் கிரெடிட் கார்டில் பணம் வசூலிக்கப்படலாம். ஸ்வைப் செய்யும் இயந்திரம் பழுதாக இருந்தால் அல்லது வங்கி சர்வர்களில் கோளாறு இருந்தால் இது ஏற்படும்.

Also read... டிசம்பர் மாதம் விவசாயிகள் ரூ.2000 வாங்கி கொள்ளலாம்.. எங்கு? எப்படி? முழு விவரம்!

உங்கள் கார்டில் இருந்து இரண்டு முறை பணம் எடுக்கப்பட்டிருந்தால், உங்கள் வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும். உங்கள் வங்கி, குறிப்பிட்ட வணிகரிடம் இதைப்பற்றி தெரிவித்து, வணிகர் உங்கள் பரிவர்த்தனையை ரிவர்ஸ் செய்வார். உங்கள் கார்டுக்கு பணம் கிரெடிட் செய்யப்படும்.

பரிவர்த்தனை ரத்து செய்தல்

நீங்கள் ஒரு பொருளை வாங்கும்போது, அந்த பரிவர்த்தனையை ரத்து செய்து, நீங்கள் செலுத்திய பணத்தை ரீஃபண்ட் செய்யக் கோரலாம். நீங்கள் ஒரு ஆர்டரைக் கேன்சல் செய்யும் பொது, பணம் உங்கள் கணக்கில் உடனடியாக திருப்பி செலுத்தப்படும். பொதுவாக, நீங்கள் எந்த கட்டண முறையை பயன்படுத்தி பணம் செலுத்தினீர்களோ, அதே கட்டண முறைக்கு உங்கள் பணம் திருப்பி செலுத்தப்படும். நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், கிரெடிட் கார்டுக்கு உங்கள் பணம் ரீஃபண்ட் செய்யப்படும். அதே போல, நீங்கள் வாங்கிய பொருள் அல்லது சேவை திருப்தியாக அல்லது தரமாக இல்லையென்றாலும், நீங்கள் ரீஃபண்ட் கோரிக்கை மேற்கொள்ளலாம்.

ஒரு வாடிக்கையாளர் சார்ஜ்பேக் கோரிக்கை வைக்கும் போது, வங்கி வணிகருக்கு பணம் செலுத்தாமல், நேரடியாக வாடிக்கையாளருக்கே செலுத்தும். சார்ஜ்பேக் கோரிக்கையை, பேமெண்ட் செலுத்திய 180 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஒரு வேளை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டு முறை பணம் வசூலிக்கப்பட்டிருந்தால், வங்கியை நேரடியாக அணுகி ரிவர்ஸ் செய்யக் கோரலாம். வங்கியோ, வணிகரோ பணம் ரிவர்ஸ் செய்ய மறுத்தால் அல்லது பரிவர்த்தனையை ரத்து செய்ய மறுத்தால், நுகர்வோர் நீதிமன்றத்தில் நீங்கள் புகார் பதிவு செய்து வழக்குத் தொடரலாம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வாங்குபவர்களின் உரிமையைப் பாதுகாக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Credit Card

அடுத்த செய்தி