வவாஹ்நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கிகளின் க்யூக்களின் நின்று சலானை பூர்த்தி செய்து மணிக்கணக்கில் காத்திருந்து பணம் எடுத்தது. ஏடிஎம் வாசலில் காத்திருந்து பணம் எடுத்த காலம் எல்லாம் மாறிவிட்டது. இப்போது எல்லாம் கிரேடிட் / டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்வது அல்லது க்யூ-ஆர் கோர்ட் ஸ்கேன் செய்து மளிகை கடையில் இருந்து மால்கள் வரை மிகச் சாதாரணமாக பணப்பரிமாற்றம் செய்து வருகிறோம். அதேபோல் ஆன்லைன் பேங்கிங் மூலம் வங்கிகளுக்கு இடையே பணப்பரிமாற்றத்தை விரைந்து செய்கிறோம்.
இந்நிலையில்தான் மோசடியாளர்கள் வங்கி கணக்குகள் அல்லது கிரேடிட் / டெபிட் கார்டுகளை குறிவைத்து நடத்தும் சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன்களுக்கு போன் செய்து நாங்க பேங்கில் இருந்து பேசுறோம் உங்க கார்டை அப்டேட் செய்யனும் ஏடிஎம் கார்டு மேல இருக்க நம்பர் மற்றும் ரகசிய கோட் நம்பர் சொல்லுங்க எனக் ஏமாற்றும் கும்பல் அதிகரித்துள்ளது. அறியாமையை பயன்படுத்தி பணத்தை பறித்து செல்கிறார்கள். இதுதொடர்பாக வங்கிகளுக்கு ஏற்கனவே ரிசர்வ் வங்கியானது எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் கடினமாக உழைத்து சேமிக்கும் பணத்தை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டியது வங்கியின் கடமை என அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் வங்கியில் அக்கவுண்ட் தொடங்கினால் அதனை தொடர்ந்து முறையாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அந்த கணக்கானது செயல்படாமல் போகலாம். அதை செயல்படுத்த மற்றும் செயல்படாத கணக்கிலிருந்து பணத்தை பெறவும் வங்கியைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் வங்கி கணக்கில் உங்களுக்கு தெரியாமல் பணப்பரிமாற்றம் நடந்து இருந்தாலோ உங்கள் அக்கவுண்டில் இருந்த பண இருப்பு குறைந்து இருந்தாலோ நீங்கள் உடனடியாக உங்க வங்கி கிளைக்கு நேரில் சென்று விவரங்களை அறிந்துக்கொள்ளவும்.
நீங்கள் கடுமையான பணிச்சுமையில் இருப்பதால் வங்கிக்கு செல்லவே தனியாக லீவ் எடுத்துச் செல்லவேண்டும் என்றால் கவலை வேண்டாம் அதற்கும் ரிசர்வ் வங்கியானது ஒரு தீர்வை வழங்கியுள்ளது. வங்கி தொடர்பான மோசடிகள் அல்லது உங்களது குறைகளை கேட்டறிய https://cms.rbi.org.in/ என்ற ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யலாம் அல்லது 14440 என்ற எண்ணை அழைத்து சந்தேகங்களை கேட்கலாம். உங்கள் சந்தேகம் குறித்து தெளிவுப்படுத்துவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ATM Card, Bank, Credit Card, Helpline Numbers, Reserve Bank of India