செவ்வாய் கிரகத்தில் நகரம் அமைப்பேன்: உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்- அமேசானின் பெசோஸை முந்தினார்

செவ்வாய் கிரகத்தில் நகரம் அமைப்பேன்: உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்- அமேசானின் பெசோஸை முந்தினார்

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலோன் மஸ்க்.

டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் இப்போது உலகின் முதல் பணக்காரராகி உள்ளார்.

 • Share this:
  டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் இப்போது உலகின் முதல் பணக்காரராகி உள்ளார்.

  டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான உயர்வு, மஸ்க்கை அமேசான்.காம் இன்க் நிறுவனத்தை விடவும் முந்திக்கொண்டு பணக்காரராக உயர்த்தியது. இந்த தகவல்கள் உலகின் 500 செல்வந்தர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ள ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  49 வயது எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 186 பில்லியன் டாலர்கள். இதன் மூலம் பெஸாஸை விடவும் 1.5 பில்லியன் அதிக நிகர மதிப்பு பெற்று மஸ்க் உலகின் பெரிய பணக்காரர் ஆனார்.

  உலகின் நம்பர் 1 பணக்காரராக தான் ஆனதைப் பற்றி அவர் “என்ன விசித்திரம்” என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

  மேலும் உலகம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்றும் செவ்வாய்க்கிரகத்தில் சுயத் தக்கவைப்பு நகரை உருவாக்கவும் தனக்குப் பணம் தேவைப்படுகிறது என்கிறார் அவர். செவ்வாய்க் கிரகத்தில் நகரம் அமைப்பது ஏன் முக்கியமெனில், பூமி மீது விண்கல் மோதி அழிந்தால் மனித குலத்துக்கும் உயிரிகளுக்கும் அழிவு ஏற்படுமே விண்கல் அளவுக்கு டைனசார்கள் உலகின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினா. அதனால்தான் செவ்வாயில் நகரம் எழுப்ப வேண்டும் என்கிறார் மஸ்க். அதற்கு தன் சம்பாத்தியத்தில் பாதியை செலவிடுவேன் என்கிறார்.

  தனக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது ஆனால் அதற்குக் காரணம் நாம் நினைப்பதல்ல என்கிறார் மஸ்க். தனக்கு பொழுதுபோக்க நேரமில்லை என்றும் பணக்காரர்களுக்கே உரிய உல்லாச வீடோ, படகுகளோ தன்னிடம் இல்லை என்கிறார்.

  17 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் டெஸ்லா நிறுவனத்தை தொடங்கினார். தொடங்கிய இருமாதங்களுக்குள்ளாகவே மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்சை அவர் கடந்து உலகின் 2வது பெரிய பணக்காரராக ஆனார்.

  இந்த டெஸ்லாவின் பங்குவிலைகள் 7 மடங்கு அதிகரித்தது. ஏனெனில் எலெக்ட்ரிக் கார்களுக்கான கிராக்கி அதிகரித்ததே.

  2020- தொடக்கத்தில் உலகின் 35வது பெரிய பணக்காரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  உலகின் 500 பணக்காரர்களின் கடந்த ஆண்டு மொத்த நிகர சொத்து மதிப்பு 1.8 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த பட்டியலில் ஐந்து தனிநபர்கள் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்தினை வைத்திருக்கிறார்கள், மேலும் 20 பேர் குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் மதிப்புடையவர்கள்.
  Published by:Muthukumar
  First published: