ஹோம் /நியூஸ் /வணிகம் /

எதிர்பாராத நிதி நெருக்கடியை சமாளிப்பது எப்படி - சிம்பிள் டிப்ஸ்

எதிர்பாராத நிதி நெருக்கடியை சமாளிப்பது எப்படி - சிம்பிள் டிப்ஸ்

மாதிரி படம்

மாதிரி படம்

லிக்விட் அசெட்ஸ் எனப்படும் எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றிக்கொள்ளக்கூடிய சேமிப்பு அல்லது சொத்து அவசர காலத்தில் ஏற்படும் செலவுகளுக்கு கைகொடுக்கும். இது உங்கள் வாழ்க்கையை பெரிதாக பாதிக்காமல், கூடுதலாய் கடன் வாங்க வைக்காமல் இருக்கவும் உதவும்.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

2020 ஆம் ஆண்டில் உலகமே கொரோனாவால் பாதிக்கப்படும் என்பதை யாரும் கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார்கள். லட்சக்கணக்கானவர்களின் வேலை, வணிகம், வாழ்க்கைமுறை ஆகியவற்றை கொரானா பெறுந்தொற்று பாதித்துள்ளது. உடல் நலம், ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் அளவுக்கு தயாராக இருப்பதும் முக்கியம் என்பதை கடந்த இரண்டு ஆண்டு காலம் கற்றுக் கொடுத்துள்ளது. எதிர்பாராமல் உண்டாகும் செலவுகளை, நிதி நெருக்கடியை சமாளிப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

அவசரகால செலவுகளுக்கு சேமிப்பு :

லிக்விட் அசெட்ஸ் எனப்படும் எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றிக்கொள்ளக்கூடிய சேமிப்பு அல்லது சொத்து அவசர காலத்தில் ஏற்படும் செலவுகளுக்கு கைகொடுக்கும். இது உங்கள் வாழ்க்கையை பெரிதாக பாதிக்காமல், கூடுதலாய் கடன் வாங்க வைக்காமல் இருக்கவும் உதவும்.

எமர்ஜென்சி நிதியில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் செய்யும் நிலையான செலவுகள் அனைத்தையும் சேர்க்கலாம். உதாரணமாக, வீட்டு வாடகை, கடன் தவணைகள், வீட்டு செலவுகள், ஆகியவை.

ALSO READ |  கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களுக்கான KYC சரிபார்ப்பை நிறைவு செய்வது எப்படி?

குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு, அதை அவசரகால நிதியாக சேமிக்கலாம். பத்து சதவிகிதம் பணமாகவும், இருவது சதவிகிதம் வங்கியிலும், எழுவது சதவிகிதம் குறுகிய கால டெப்பாசிட்டுகள், குறைவான ரிஸ்க் உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு :

மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்பாராமல் ஏற்படும் விபத்து அல்லது நோய்களுக்கான செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடு மிகவும் அவசியம். உங்கள் குடும்பம் முழுவதுக்கும் தேவைப்படும் மருத்துவக் காப்பீட்டை பெறுவது உங்களை எதிர்பாராத மருத்துவ செலவுகளை குறைப்பதோடு, உங்கள் சேமிப்பை பாதுகாக்கும்.

ALSO READ |  எஸ்பிஐ கஸ்டமர்ஸ் இதை தெரிஞ்சிக்காம ஏடிஎம் போனா நஷ்டம் உங்களுக்கு தான்!

அதே போல, குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் ஆயில் காப்பீடு பெற்றுக் கொள்வது, ஆபத்து நேரத்தில் நிதி ரீதியாக பாதுகாப்பை உறுதி செய்யும். உங்கள் ஆண்டு வருமானத்தில் குறைந்தது பத்து மடங்கு தொகைக்கு காப்பீடு பெறுவது சிறந்தது.

உங்களுக்கு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இருந்தால் கல்வி காப்பீடு பெறுவதும் பயனுள்ளதாக இருக்கும்.

சேமிப்பை அதிகப்படுத்தி கடனை முறையாக நிர்வகிக்கவும் :

மாதந்திர வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை சேமிப்புக்கு ஒதுக்க வேண்டும். உங்களின் முக்கியமான செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். தேவையற்ற கடன்களைப் பெறுவதைக் குறைப்பது, கடன் தவணைகளை முறையாக செலுத்தி, கிரெடிட் ஸ்கோரை நிர்வகிப்பது உதவியாக இருக்கும்.

ALSO READ |  இனியும் தாமதம் வேண்டாம்.. போஸ்ட் ஆபீஸில் இந்த கணக்கை உடனே ஓபன் செய்யுங்கள்!

எந்த கட்டணம் / பில் செலுத்தினாலும் உரிய தேதியில் செலுத்துவது கூடுதல் கட்டணத்தைத் திறக்க உதவும். மாதந்திர சேமிப்பு, கடன்களைத் திருப்பி செலுத்துதல், ஆகிய இரண்டுமே நீண்ட கால நிதி மேம்பாட்டுக்கு பெரிய உதவியாக இருக்கும். உங்கள் செலவுகள் போக கூடுதலாக பணம் இருக்கும் போது, அதிக வட்டி இருக்கும் இருக்கும் கடன்களை செலுத்தலாம்

வரி விலக்கு அளிக்கக்கூடிய சேமிப்புகள் மட்டும் முதலீடுகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது இரட்டை பயன்களை அளிக்கும்.

First published:

Tags: Savings