வோடஃபோன் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இனி SMS அனுப்ப முடியாது

வோடஃபோன்

நாட்டின் அனைத்து தொலை தொர்பு நிறுவனங்களும் இந்த ஆண்டு தங்களது பிளான்களுக்கான கட்டணத்தை உயர்த்துவர்கள் என்று தகவல் வெளியாகின.

 • Share this:
  இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த சலுகைகள் மூலம் தங்களது லாபத்தையும் அதிகரித்து கொள்ள அவர்களின் நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களது பிளான்களை மாற்றியமைத்து வருகின்றனர்.

  நாட்டின் அனைத்து தொலை தொர்பு நிறுவனங்களும் இந்த ஆண்டு தங்களது பிளான்களுக்கான கட்டணத்தை உயர்த்துவர்கள் என்று தகவல் வெளியாகின. ஆனால் பிளான்கள் கட்டணத்தை அதிகரிக்காமல், மறைமுகமாக சில பயன்களை குறைக்க தொடங்கி உள்ளனர்.

  இந்த மறைமுக திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் அந்த சேவையை பெறுவதற்கு வேறொரு பிளானை பின்தொடர வேண்டும். இதனால் அந்த நெட்வொர்க்கின் லாபம் அதிகரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக செலவீனம் இல்லாதது போல் இருக்கும்.

  Also Read : கிரெடிட் கார்டு வாங்கும் ஐடியா இருக்கிறதா? சரியான கார்டை தேர்வு செய்ய கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

  அதன்படி வோடஃபோன் ஐடியா நெட்வொர்க் தனது இரண்டு பிளான்களுக்கு அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ் சேவையை நிறுத்தி உள்ளது. வோடஃபோன் அறிவித்துள்ள பிளான் படி ரூ.99 மற்றும் ரூ.109 பிளான்களின் அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ் சேவை மட்டும் நிறத்தப்பட்டுள்ளது.

  ஆனால் அவுட்கோயிங் வசதி நிறுத்தப்பட்டாலும் ஒடிபி மற்றும் இன்கம்மிங் எஸ்.எம்.எஸ் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டுமானால் வேறொரு பிளானை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் வோடஃபோன் நெட்வொர்க் தனது லாபத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

  Also Read : இன்று  முதல் 7 முக்கிய மாற்றங்கள்.. உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: