முகப்பு /செய்தி /வணிகம் / வழக்கமான இடைவெளியில் மொபைல் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்துவது அவசியம் - வோடபோன் ஐடியா அறிக்கை.!

வழக்கமான இடைவெளியில் மொபைல் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்துவது அவசியம் - வோடபோன் ஐடியா அறிக்கை.!

vodafone

vodafone

Vodafone Idea | மொபைல் கட்டண உயர்வு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நியாயமான வருவாயை அளிக்கவும், எதிர்கால முதலீடுகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் என்று அறிக்கை ஒன்றில் வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

  • Last Updated :

நாட்டின் முக்கிய டெலிகாம் ஆப்ரேட் நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிட்டெட் (Vodafone Idea Ltd), தொலைத்தொடர்பு துறை இன்னும் குறைந்த விலையில் செயல்பட்டு வருவதாக கருத்து தெரிவித்து உள்ளது.

எனவே டெலிகாம் துறையானது குறிப்பிட்ட கால இடைவெளியில் மொபைல் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்த வேண்டும் என்று வோடபோன் ஐடியா லிமிட்டெட் கூறி இருக்கிறது. மொபைல் கட்டண உயர்வு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நியாயமான வருவாயை அளிக்கவும், எதிர்கால முதலீடுகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் என்று அறிக்கை ஒன்றில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா லிமிடெட் ஆகிய 3 முக்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடந்த ஆண்டு டேட்டாவிற்கான கட்டணங்களை உயர்த்தின. இதனிடையே ஒரு யூஸரிடமிருந்து நிறுவனங்களுக்கு கிடைக்கும் சராசரி வருவாய் (ARPU -Average revenue per user) குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

VIL அதன் சமீபத்திய ஆண்டறிக்கையில், உலகளவில் இந்தியா தொடர்ந்து மிக குறைந்த டெலிகாம் சர்விஸ் கட்டணங்களை கொண்டுள்ள அதே நேரத்தில் அன்லிமிட்டட் டேட்டா பிளான்களின் பெருக்கம், உலகிலேயே அதிக டேட்டா உபயோகம் (ஒரு சந்தாதாரருக்கு) உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றி இருக்கிறது என கூறியுள்ளது. வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனமானது தொழில்துறை குறிப்பிட்ட இடைவெளியில் கட்டணங்களை உயர்த்த வேண்டும், இது ஆபரேட்டர்கள் தங்கள் மூலதனத்தின் மீது நியாயமான வருமானத்தை ஈட்ட மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உட்பட எதிர்கால முதலீடுகளுக்கு ஆதரவளிக்க அவசியம் என நம்புகிறது. மார்ச் 31, 2022 நிலவரப்படி வோடபோன் ஐடியா லிமிட்டெட் சுமார் 24.38 கோடி யூஸர்களை கொண்டுள்ளது, இதில் 11.81 கோடி பேர் 4G யூஸர்கள் ஆவர்.

Also Read : 90 நாட்கள் வேலிடிட்டி, 2GB தினசரி டேட்டாவுடன் கூடிய பிளான் அறிமுகம்.!

சட்டப்பூர்வ நிலுவை தொகையை 10 ஆண்டுகளில் செலுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில், டெலிகாம் துறை எதிர்கொள்ளும் பணப்புழக்க சவால்களை எதிர்கொள்ள கடந்த 2021 செப்டம்பரில் தொழில்துறைக்கான நிவாரண திட்டத்தை (relief package) அரசு அறிவித்தது. இதை சுட்டிக்காட்டியுள்ள நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வாய்ஸ் மற்றும் டேட்டா எக்ஸ்பீரியன்ஸ் லீக் அட்டவணைகளை வழிநடத்துவது உட்பட பல்வேறு ஆப்ரேட்டிங் KPI-க்களில் முன்னேற்றம் காண தொடங்கியுள்ளது. மேலும் சப்ஸ்கிரைப்பரகளின் எண்ணிக்கை சரிவின் வேகமும் ஓரளவு குறைந்துள்ளது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Also Read : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை.. விரைவில் வருகிறது பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்.! 

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ஆண்டறிக்கையில், வருவாயை மேலும் அதிகரிக்க சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், நன்கு வரையறுக்கப்பட்ட உத்தியைப் பின்பற்றி லாபம் ஈட்டி வருவதால் கணிசமான அளவு நஷ்டம் குறைந்துள்ளதாகவும் கூறி உள்ளது. நிறுவனம் தற்போது கடன் நிதியை பெற வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தால் வளர்ச்சி பயணத்தை நோக்கி செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 25, 2021 முதல், நிறுவனம் அன்லிமிட்டட் புலன்கள் மற்றும் காம்போ வவுச்சர்கள் உட்பட அனைத்து விலைப் புள்ளிகளிலும் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியது. அதிகரித்து வரும் பயன்பாட்டிற்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திறனை ஆபரேட்டர்கள் கொண்டிருப்பது அவசியம். எனவே டெலிகாம் துறையை புதுப்பிக்க கட்டண உயர்வு முக்கியமானதாக உள்ளதாக நிறுவனம் கூறியிருக்கிறது.

First published:

Tags: Recharge Tariff, Vodafone