இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான வோடாஃபோன் ஐடியா 2018 அக்டோபர் - டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 5,005 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.
டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் வோடோஃபோன் ஐடியா நிறுவனம் வரிக்கு பிந்தைய நஷ்டமே இந்த 5,005 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.
டெலிகாம் சேவை செயல்பாட்டில் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 11,765 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது.
வோடாஃபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைந்ததை அடுத்து வெளியாகும் காலாண்டு முடிவுகள் என்பதால் முந்தைய ஒப்பீடுகள் குறித்த விவரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் காலாண்டில் ஒரு பயனரிடமிருந்து வோடாஃபோன் பெற்ற சராசரி வருவாய் 88 ரூபாயாக இருந்தது. இதுவே மூன்றாம் காலாண்டில் 89 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஒரு காலாண்டில் இவ்வளவு மிகப் பெரிய நட்டத்தை வோடாஃபோன் ஐடியா பதிவு செய்துள்ளதால் ஊழியர்கள் தங்களது வேலை பறிபோய்விடுமோ என்று அச்சம் அடைந்து வருகிறனர். அதே நேரம் வோடாஃபோன் ஐடியா இந்த ஆண்டில் 25,000 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்வதற்கான நிதியைத் திரட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மூன்றாம் காலாண்டு அறிவிப்பு என்பதால் நஷ்டம் தான் அடையும் என்ற கணிப்பால் வோடாஃபோன் ஐடியா பங்குகள் இன்றைய சந்தை நேர முடிவில் 0.50 புள்ளிகள் சரிந்து 29.80 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது.
மேலும் பார்க்க: சாரதா நிறுவனம் செய்த மோசடி என்ன?
Published by:Tamilarasu J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.