பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Vi , 7,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனைத் திரட்டுவதற்காக பல கடன் வழங்குநர்களை அணுகியுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் ஜனவரி 6 அன்று தெரிவித்தது. கடனாக கேட்கும் தொகையில் பெரும்பகுதி இண்டஸ் டவர்ஸுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
பல பிரபல வங்கி மற்றும் கடன் தரும் நிறுவனங்களிடம் 15,000 கோடி வங்கி உத்தரவாதங்கள் மற்றும் புதிய கடன்களை வழங்குமாறு Vi கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சமீபகாலமாக Vi நிறுவனம் சுமார் 75,830.8 கோடி எதிர்மறை நிகர மதிப்பைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
நஷ்டத்தை குறிக்கும் எதிர்மறை நிகர மதிப்பு கொண்ட நிறுவனத்திற்கு வங்கி அமைப்புகள் கடன்களை வழங்க முடியாது என்பதால் எல்லா இடங்களிலும் மறுப்பு செய்தி மட்டுமே கிடைத்து வருகிறது, இந்த கடன் இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல.
நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த இங்கிலாந்தின் வோடபோன் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் (ஏபிஜி) இணைந்து vi என்ற புதிய கூட்டு சேவையை 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்காக Indus டவர் நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் Vi நிறுவனம் நஷ்டத்தில் சென்றுகொண்டு இருப்பதால் டவர் நிறுவனத்திற்கு சரிவர பணம் செலுத்தவில்லை.
சென்ற ஆண்டே Indus நிறுவனம் Vi நிறுவனம் பணம் செலுத்தப்படாவிட்டால் டவர் தளங்களுக்கான அதன் அணுகலைத் துண்டிக்கும் என்று எச்சரித்திருந்தது. பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒத்திவைக்கப்பட்ட கட்டண திட்டத்தை வழங்கியது, அதை டவர் நிறுவனமும் ஏற்றுக்கொண்டது.
அதன்படி டவர் நிறுவனத்திற்கு ஜனவரி முதல் அதன் தற்போதைய நிலுவைத் தொகையில் 100 சதவீதத்தை செலுத்த உறுதியளித்துள்ளது. அறிக்கையின்படி, Vi நிறுவனம் Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டவர் நிறுவனத்திற்கு Vi நிறுவனம் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை ரூ.250-300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை செலுத்த பணம் இல்லாத நிலையில்தான் கடன் கேட்டு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அலைந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.