ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக் கொள்ள சிறப்பு திட்டம்

நடப்பாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு விகிதம் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.

ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக் கொள்ள சிறப்பு திட்டம்
ஜிஎஸ்டி
  • Share this:
நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியில் மாநில அரசுகள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது, 2019-20ம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் 95 ஆயிரத்து 444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.


நடப்பாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு விகிதம் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் ஏற்படும் இழப்பீடு பற்றாக்குறை 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக் கொள்ள நடப்பு ஆண்டில் மட்டும் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாவதாக ரிசர்வ் வங்கியில் இருந்து 97 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம். நியாயமான வட்டியுடன் இந்த கடன் தொகையை ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாநில அரசுகள் கடன் பெறும் வரம்பை பூஜியம் புள்ளி 5 விழுக்காடாக உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், ஏதாவது ஒரு வாய்ப்பை தேர்ந்தடுக்கும்படியும், அடுத்த ஒருவாரத்திற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே, இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இழப்பீடு தொகையை ஈடுகட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க போவதில்லை என்று தெரிவித்தார்.

 
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading