• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Vistara Sale | ரூ.995-ல் விமானப் பயணம்.. விஸ்தாராவின் 48 மணிநேர அதிரடி சேல்...!

Vistara Sale | ரூ.995-ல் விமானப் பயணம்.. விஸ்தாராவின் 48 மணிநேர அதிரடி சேல்...!

விஸ்தாரா விமானம்.

விஸ்தாரா விமானம்.

vistara anniversary sale |

  • News18
  • Last Updated :
  • Share this:
    விஸ்தாரா விமான நிறுவனம் சிறப்பு சலுகை பயண டிக்கெட் விற்பனையை தொடங்க உள்ளது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்களின்படி, ரூ.995 முதல் உள்நாட்டு பயணத்தையும், ரூ.14,555 முதல் வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளலாம்.

    இன்று (ஜனவரி 9) நள்ளிரவு இந்த சிறப்பு சலுகை டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. இந்த சலுகை மூலம் ஜனவரி 25 முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் பயணத்தின் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். உள்நாட்டு பயணத்தை பொறுத்தவரை எகனாமிக் கிளாஸ் டிக்கெட்கள் ரூ.995 முதல் தொடங்குகிறது. பிரீமியம் எகனாமிக் கிளாஸ் டிக்கெட்கள் ரூ.1995 முதலும், பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்கள் ரூ.5,555 முதல் தொடங்குகின்றன.

    சர்வதேச பயணத்தைப் பொறுத்தவரை ரூ.14,555 முதல் எகனாமிக் கிளாஸ் டிக்கெட்களும், பிரீமியம் எகனாமிக் கிளாஸ் டிக்கெட்கள் ரூ.19,955 முதலும், பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்கள் ரூ.35,555 முதல் தொடங்குகின்றன. இந்த கட்டணமானது எல்லா வரிகளையும் உள்ளடக்கியது ஆகும்.

    மும்பை - ஹைதராபாத் டிக்கெட்கள் 1495 ரூபாயில் கிடைக்கின்றன. டெல்லி - பாங்காக் டிக்கெட்கள் ரூ.14,555 முதல் கிடைக்கின்றன.

    டாடா சன்ஸ் குழுமம் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான விஸ்தாரா விமான நிறுவனம் 2013 முதல் தனது சேவையை நடத்தி வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: