ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஏர் இந்தியா உடன் இணையும் விஸ்தாரா.. டாடா அறிவிப்பு

ஏர் இந்தியா உடன் இணையும் விஸ்தாரா.. டாடா அறிவிப்பு

விஸ்தாரா - ஏர் இந்தியா இணைப்பு

விஸ்தாரா - ஏர் இந்தியா இணைப்பு

ஏர் இந்தியாவுடன், விஸ்தாராவை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன்படி 2024ஆம் ஆண்டுக்குள் இரு நிறுவனங்களும் இணைக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.

கடனில் சிக்கி தவித்து வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து ரூ. 1800 கோடிக்கு டாடா குழுமம் வாங்கியது. ஏர் இந்தியாவை வாங்கிய டாடா குழுமம், விஸ்தாரா என்ற விமான சேவை நிறுவனத்தை 49% பங்குகளை வைத்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏற்கெனவே நடத்தி வருகிறது. விஸ்தாராவின் 51 சதவீத பங்குகளை டாடா வைத்துள்ள நிலையில் மீதமுள்ள 49 சதவீத பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்துள்ளது.

இதனிடையே ஏர் இந்தியாவுடன், விஸ்தாராவை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன்படி 2024ஆம் ஆண்டுக்குள் இரு நிறுவனங்களும் இணைக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் டிச. 1 டிஜிட்டல் கரன்சி வெளியீடு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்த இணைப்பின் மூலம் 218 விமானங்களுடன் நாட்டின் பெரிய சா்வதேச விமான நிறுவனம், இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனம் ஆகிய பெருமைகளை ஏா் இந்தியா பெறும் என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Air India, TATA