ஹோம் /நியூஸ் /வணிகம் /

வானத்துல பறக்கனுமா? வெறும் ரூ.1899 க்கு விமான பயணம்.. நாளையோடு முடியும் அசத்தல் ஆஃபர்!

வானத்துல பறக்கனுமா? வெறும் ரூ.1899 க்கு விமான பயணம்.. நாளையோடு முடியும் அசத்தல் ஆஃபர்!

விஸ்தாரா விமானம்

விஸ்தாரா விமானம்

ஜனவரி 8 அன்று தொடங்கிய இந்த ஆஃபர் நாளை -12 ஜனவரி 2023 அன்று 23:59 மணி வரை இருக்கும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டணியில் உருவான விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு உச்சக்கட்ட  தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் புதிய பயணிகள் கூட்டத்தை ஈர்க்கும் திட்டத்தில் உள்ளது. உள்நாடு சந்தை பங்கின் அடிப்படையில் 2022 ஆண்டிற்கான இந்தியாவது இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக  விஸ்தாரா விமான நிறுவனம் மாறியுள்ளது. அதே போல் முதன் முறையாக 1 மில்லியன் மாதாந்திர உள்நாட்டுப் பயணிகளைக் கடந்து, ஸ்கைட்ராக்ஸின் உலகின் சிறந்த 20 விமான நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்துள்ளது.

வெற்றிகரமான விஸ்தாராவின் எட்டு வருடச் சிறப்பை நாங்கள் கொண்டாடும் வேளையில், இந்த சிறப்பு விற்பனையின் மூலம் எங்கள் பயணத்தின் மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று விஸ்தாராவின் தலைமை வணிக அதிகாரி தீபக் ரஜாவத் கூறினார்.

அதோடு விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது எட்டாவது ஆண்டு நிறைவை டிவிட்டரில் கியூட் ஆகப் பதிவிட்டு உள்ளது. "விஸ்தாராவுக்கு 8 வயசு ஆச்சு, இது புதிய உணர்வாக உள்ளது! புதிய பாதையை நோக்கி நாங்கள் நகரும் வேளையில், எங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நெட்வொர்க்கில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சிறப்புக் கட்டணங்களை பெறலாம்" என்று விஸ்தாரா விமான நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

உள்நாட்டுப் பயணத் தள்ளுபடி

விஸ்தாரா உள்நாட்டு ஒரு-வழி பயணத்தில் இருக்கை, பயணம், அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கிய எகனாமி வகுப்பிற்கு 1,899 ரூபாயும், பிரீமியம் எகானமி வகுப்பிற்கு 2,699 ரூபாயும், பிஸ்னஸ் கிளாஸ் வகுப்பிற்கு 6,999 ரூபாய் மட்டுமே என அறிவித்துள்ளது. இது நேரடி விமான பயணங்களுக்கு மட்டும் பொருந்தும்.

வெளிநாட்டுப் பயணத் தள்ளுபடி

அதேபோல் விஸ்தாரா நிறுவனத்தின் சர்வதேச விமானப் பயணத்தைப் பொறுத்தவரை, ரவுண்டு ட்ரிப் எகானமி வகுப்பிற்கு (டெல்லி-காத்மாண்டு) 13,299 ரூபாயும், பிரீமியம் எகானமிக்கு (டெல்லி-காத்மாண்டு) 16,799 ரூபாயும் பிஸ்னஸ் கிளாஸ் பிரிவுக்கு (டெல்லி-காத்மாண்டு மற்றும் மும்பை-காத்மாண்டு) 43,699 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் வெளிநாட்டு பயணத்தின் மிக குறைந்த கட்டணம். இந்தக் கட்டணம் ஒவ்வொரு நாட்டு பயணத்திற்கும் மாறுபடும்.

கூடுதல் சலுகை:

தள்ளுபடி விலையில் டிக்கெட் கொடுப்பதோடு கூடுதல் சலுகையையும் அறிவித்துள்ளது. அதன்படி விஸ்தாரா கட்டண இருக்கைகள் மற்றும் கூடுதல் லக்கேஜ்  கட்டணத்திற்குச் சுமார் 23 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.

ஜனவரி 8 அன்று தொடங்கிய இந்த ஆஃபர் நாளை -12 ஜனவரி 2023 அன்று 23:59 மணி வரை இருக்கும்.  இந்தத் தள்ளுபடிகள் அனைத்தும் 23 ஜனவரி 2023 முதல் 30 செப்டம்பர் 2023 வரையிலான இடைப்பட்ட காலப் பயணங்களுக்கு செல்லுபடியாகும். இந்த ஆண்டு நீங்க பயண திட்டம் போட்டிருந்தாள் நாளைக்குள் அதற்கான டிக்கெட்டை சலுகை விலையில் புக் பண்ணிக்கோங்க.

First published:

Tags: Offer, Ticket booking, Vistara