முகப்பு /செய்தி /வணிகம் / மத்திய அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது; விஜய் மல்லையா குற்றச்சாட்டு!

மத்திய அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது; விஜய் மல்லையா குற்றச்சாட்டு!

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய பா.ஜ.க அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள மல்லையா, கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உதவி செய்வதை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

தனது கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் நலனுக்காக 4 ஆயிரம் கோடி இருப்பு வைத்திருந்ததாகவும், அதை அங்கீகரிக்காமல் வங்கிகள் மூலம் மத்திய அரசு முடக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தனது தலைசிறந்த விமான நிறுவனம், ஊழியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், மத்திய பா.ஜ.க அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

மேலும் பார்க்க:

First published:

Tags: Jet Airways, Vijay Mallya