மல்லையா தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

புதிய சட்டத்தின் கீழ் பொருளாதார மோசடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் இந்தியாவில் உள்ள மோசடியாளர்களின் சொத்துக்களை எளிதாக அமலாக்கத் துறையினரால் பறிமுதல் செய்ய முடியும்.

Web Desk | news18
Updated: January 5, 2019, 5:29 PM IST
மல்லையா தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு
விஜய் மல்லையா
Web Desk | news18
Updated: January 5, 2019, 5:29 PM IST
விஜய் மல்லையா 9,000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி செய்துவிட்டு லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், அவரது வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதி மன்றம் புதிய மோசடி சட்டத்தின் கீழ் தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதிய சட்டத்தின் கீழ் பொருளாதாரக் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் விஜய் மல்லையாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்யவும் அவகாசம் ஏதும் வழங்க முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் கீழ் பொருளாதார மோசடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் இந்தியாவில் உள்ள மோசடியாளர்களின் சொத்துக்களை எளிதாக அமலாக்கத் துறையினரால் பறிமுதல் செய்ய முடியும். பறிமுதல் செய்த சொத்துக்களை விற்பதன் மூலம் வங்கிகள் அளித்த கடனை மீட்கவும் முடியும்.

நிதி மோசடி செய்தவர்களுக்கு எதிரான இந்தப் புதிய சட்டத்திற்கான அனுமதியை 2018 ஆகஸ்ட் மாதம் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கையெழுத்திட்டதை அடுத்து அமலுக்கு வந்த 5 மாதத்தில் முதல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் பொருளாதார குற்றவாளி என்று தீர்ப்பளிப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

சென்ற மாதம் இங்கிலாந்து நீதிமன்றம் இந்திய அரசு வழங்கியுள்ள உறுதிமொழியை ஏற்று விஜய் மல்லையாவை வங்கி மோசடி வழக்கின் விசாரணைக்கு ஒப்படைக்கலாம் என்று கூறியுள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் விஜய் மல்லையா இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

கடந்த சில மாதங்களாக நீரவ் மோடி, மேஹூல் சோக்ஸி எனக் கடன் பெற்று மோசடி செய்தவர்கள் பட்டியலில் உள்ளவர்களை அரசு மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
Loading...
மேலும் படிக்க: பள்ளியை சூறையாடிய மாணவர்கள்...! கஞ்சா புழக்கமே காரணம் என்று குற்றச்சாட்டு
First published: January 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...