திறக்க சொல்லுது அரசு... கடையை மூட சொல்றாங்க போலீசு... வணிகர்கள் புகார்

News18 Tamil
Updated: June 10, 2019, 10:47 PM IST
திறக்க சொல்லுது அரசு... கடையை மூட சொல்றாங்க போலீசு... வணிகர்கள் புகார்
விக்கிரமராஜா
News18 Tamil
Updated: June 10, 2019, 10:47 PM IST
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்கலாம் என்று அரசாணை வெளியிட்டும் காவல்துறையினர் பல இடங்களில் இரவு நேரங்களில் இடையூறு ஏற்படுத்துவதாக டிஜிபி அலுவலகத்தில் வணிகர் சங்கம் புகார் மனு அளித்துள்ளது.

தமிழக அரசு 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்யலாம் என்று அரசாணையை வெளியிட்டது. அதன்படி இரவு நேரங்களிலும் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து தங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

எனினும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் இரவு நேரங்களில் கடைகளை அடைக்கும்படி வற்புறுத்துவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரமராஜா இதுகுறித்து சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் தொடர்ந்து காவல்துறையினர் வியாபாரிகளை இரவு நேரங்களில் கடைகளை அடைக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், இது சம்பந்தமாக முதலமைச்சரை விரைவில் சந்தித்து மனு ஒன்றினை அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
First published: June 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...