வோடபோன் - ஐடியாவின் ஃபேமிலிபேக் போஸ்ட்பெய்ட் பிளான்களில் சூப்பர் மாற்றம்!

வோடபோன் - ஐடியாவின் ஃபேமிலிபேக் போஸ்ட்பெய்ட் பிளான்களில் சூப்பர் மாற்றம்!

தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா என்டர்டெயின்மென்ட் பிளஸ் போஸ்ட்பெய்ட் பிளானை இப்போது மாற்றியமைத்துள்ளது.

  • Share this:
Vi முன்னர் வோடபோன் ஐடியா என்று அழைக்கப்பட்டது (Vi (formerly Vodafone Idea)). தற்போது பல்வேறு ப்ளான்களை வழங்கும் Vi புதிய பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களுக்கு ரூ .699 என்டர்டெயின்மென்ட் பிளஸ் மற்றும் ரூ .1,099 விஐபி ரெட் எக்ஸ் தனிநபர் போஸ்ட்பெய்ட் பிளான்களுக்கு ரூ. 249 செலுத்துவதன் மூலம் ஃபேமிலிபேக் போஸ்ட்பெய்ட் பிளானாக (family postpaid plan) மேம்படுத்த உதவுகிறது.  ஒன்லி டெக்கில் (Only Tech) கிடைக்கும் தகவல்களின்படி, பயனர்கள் சேர்க்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ .249 செலுத்தி இரண்டு தனிப்பட்ட போஸ்ட்பெய்ட் பிளான்களின் கீழ் ஐந்து உறுப்பினர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம்.

ஆகையால், ரூ .699 என்டர்டெயின்மென்ட் பிளஸ் பிளான் (Rs 699 Entertainment Plus plan) இரண்டு இணைப்புகளுக்கு, குடும்ப போஸ்ட்பெய்ட் பிளானாக மாற்றப்பட்டால் அதன் புதிய செலவு ரூ .948 க்கு (வரிகளைத் தவிர) வரும். இந்த சமீபத்திய புதுப்பிப்புகள் MyVi இணையதளத்தில் பிரதிபலிக்கவில்லை, மேலும் இந்த பிளான் உ.பி. கிழக்கு வட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. இந்த பிளான் நன்மைகளைப் பொறுத்தவரை, இரண்டு பிளான்களின் கீழும் இரண்டாம் நிலை பயனர்கள் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகள், மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 30 ஜிபி இணையத் டேட்டாவை (Local and STD calls, 100 SMS per month, and 30GB of internet data) பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

டேட்டா மாற்றம் பிளானிற்கு இரண்டாம்நிலை பயனரும் தகுதி பெறுவார்கள்.

ரூ. 699 என்டர்டெயின்மென்ட் பிளஸ் மற்றும் ரூ .1,099 விஐபி ரெட் எக்ஸ் போஸ்ட்பெய்ட் பிளான்கள் பெறும் அதே பழைய நன்மைகளை முதன்மை பயனர் தொடர்ந்து அனுபவிப்பார். Vi ன் வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்பு, அமேசான் பிரைம் மற்றும் ஜீ 5 சந்தாக்களின் ஒரு வருடம் மற்றும் தனிப்பட்ட போஸ்ட்பெய்ட் பிளான்களின் கீழ் Vi மூவிகள் மற்றும் டிவி உள்ளடக்கத்திற்கான (Access to Vi Movies and TV content) அணுகலை வழங்குகிறது.

இருப்பினும், ரூ .1,099 பிளானில் கூடுதல் செலவில் ஆண்டுக்கு நான்கு முறை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஓய்வகங்களுக்கு (International and Domestic airport lounges) அணுகல், ஆண்டுக்கு ரூ .5,988 மதிப்புள்ள நெட்ஃபிளிக்ஸ் (Netflix) சந்தா, மற்றும் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் ஐ.எஸ்.டி (ISD - US and Canada) அழைப்புகள் 50 பைசாக்கள் நிமிடத்திற்கு கிடைக்கிறது. தற்போது, வோடபோன்-ஐடியா இந்தியாவில் அதே விலையை கொண்டுள்ள போஸ்ட்பெய்ட் குடும்பத் பிளான்களை (postpaid family plans) வழங்குகிறது.

உதாரணமாக, ரூ. 649 குடும்பத் பிளான் (family plans) இரண்டு இணைப்புகளை அனுமதிக்கிறது, அங்கு முதன்மை பயனருக்கு 50GB டேட்டா, 200GB டேட்டா ரோல்ஓவர் மற்றும் வருடாந்திர அமேசான் பிரைம் மற்றும் ஜீ 5 சந்தா (Amazon Prime and Zee5 subscription) கிடைக்கிறது. இரண்டாம் நிலை இணைப்பு வரம்பற்ற அழைப்பு மற்றும் 30GB இன்டர்நெட் டேட்டாவை பெறுகிறது. அதேசமயம், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம்நிலை உறுப்பினருக்கு வரம்பற்ற அழைப்பு, 30GB டேட்டா மற்றும் 50GB டேட்டா ரோல்ஓவர் கிடைக்கிறது. கூடுதலாக, இந்த பிளான் ஒவ்வொரு புதிய உறுப்பினருக்கும் ரூ .249 கூடுதல் செலவில் மொத்தம் நான்கு இணைப்புகளை அனுமதிக்கிறது குறிப்பிடத்தக்கது.
Published by:Vijay R
First published: