ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியாவின் முதல் சிப் தொழிற்சாலைக்காக ரூ .1.54 லட்சம் கோடி முதலீடு செய்யும் வேதாந்தா - ஃபாக்ஸ்கான்..!

இந்தியாவின் முதல் சிப் தொழிற்சாலைக்காக ரூ .1.54 லட்சம் கோடி முதலீடு செய்யும் வேதாந்தா - ஃபாக்ஸ்கான்..!

வேதாந்தா

வேதாந்தா

இந்திய நிறுவனமான வேதாந்தா மற்றும் தைவானை சேர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து இந்தியாவின் முதல் செமிகன்டக்டர் ஆலையை அமைப்பதற்கு குஜராத் மாநிலத்தில் ரூ.1.54 லட்சம் கோடியில் மிகப்பெரிய முதலீடுகளை செய்ய உள்ளன. 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  இந்திய நிறுவனமான வேதாந்தா மற்றும் தைவானை சேர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து இந்தியாவின் முதல் செமிகன்டக்டர் ஆலையை அமைப்பதற்கு குஜராத் மாநிலத்தில் ரூ.1.54 லட்சம் கோடியில் மிகப்பெரிய முதலீடுகளை செய்ய உள்ளன.

  தைவான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க, உள்நாட்டிலேயே செமிகன்டக்டர்களை உற்பத்தி செய்வதற்கான நிதி ஊக்கத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

  இது தொடர்பான PLI (Production Linked Incentive) திட்டத்திற்கு விண்ணப்பித்ததில் தேர்வு செய்யப்பட்டதில் வேதாந்தா-ஃபாக்ஸ்கான் பார்ட்னர்ஷிப்பும் ஒன்றாகும்.

  செமிகன்டக்டர் சிப்ஸ் அல்லது மைக்ரோசிப்ஸ்கள் கார்கள் முதல் மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் வரை பல டிஜிட்டல் நுகர்வோர் தயாரிப்புகளின் இன்றியமையாத பகுதிகளாக இருக்கின்றன. வேதாந்தா- ஃபாக்ஸ்கானின் பார்ட்னர்ஷிப்பில் அகமதாபாத் மாவட்டத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் செமிகன்டக்டர் ஃபேப் யூனிட், டிஸ்ப்ளே ஃபேப் யூனிட் மற்றும் செமிகன்டக்டர் அசெம்பிளிங் மற்றும் டெஸ்டிங் யூனிட் ஆகியவை அமைய உள்ளது. குஜராத்தில் அமைய உள்ள இந்த ஆலையில் இன்னும் 2 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த தகவலை வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசடன், வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் சமீபத்தில் கையெழுத்திட்டார்.

  ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இது பேசிய அனில் அகர்வால், ‘மேட் இன் இந்தியா’ அதாவது உள்நாட்டில் உருவாக்கப்படும் செமிகன்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே பேனல்கள் பல பொருட்களின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

  உதாரணமாக தற்போது ரூ.1 லட்சம் என்ற விலையில் கிடைக்கும் லேப்டாப்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ள செமிகன்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே பேனல்களை பயன்படுத்திய பிறகு அதன் விலை ரூ.40,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்றார்.

  டிஸ்பிளே பேனல்களுக்கு பயன்படுத்தப்படும் கிளாஸ்கள் தற்போது தைவான் மற்றும் கொரியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதுவும் மேட் இன் இந்தியா தயாரிப்பாக விரைவில் மாறும் போது செமிகன்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே பேனல்கள் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பெருமளவு குறையும் வாய்ப்பு ஏற்படும் என்று விளக்கம் அளித்து உள்ளார்.

  மேலும் இந்த ஆலை மூலம் சுமார் 10,000 வேலை வாய்ப்புகள் உருவகம் என்று கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் ட்விட்டரில், " இந்தியா தனது மக்களின் மட்டுமல்ல, வெளிநாடுகளின் டிஜிட்டல் தேவைகளையும் பூர்த்தி செய்யும். சிப் இறக்குமதியிலிருந்து, ஒரு சிப் தயாரிப்பாளராக இந்தியாவின் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது… ஜெய் ஹிந்த்! " என பதிவிட்டுள்ளார்.

  Read More: அடி தூள்..! முக்கியமான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்கிறது

  மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் PLI திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Foxconn, Gujarat, Taiwan