Gold Rate | 37,000 ரூபாய்க்கும் கீழ் சென்றது தங்கம் விலை

Gold Rate | 37,000 ரூபாய்க்கும் கீழ் சென்றது தங்கம் விலை

தங்கம்

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

  • Share this:
    சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 37 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 36,968 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 4,621 ரூபாயாக உள்ளது. அதேபோல வெள்ளி விலையும் இன்று அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 70 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 70,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    இந்த மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்றைய தினத்தில் தங்கம் விலை எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், மகிழ்ச்சியூட்டும் விதமாக இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... Sasikala Release : வி. கே. சசிகலா விடுதலை ஆனார்... பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் குவிந்த ஆதரவாளர்கள்



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: