முகப்பு /செய்தி /வணிகம் / 6 பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த நிரந்தர தடை... தற்கொலையைக் குறைக்க தமிழ்நாடு அரசு அதிரடி

6 பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த நிரந்தர தடை... தற்கொலையைக் குறைக்க தமிழ்நாடு அரசு அதிரடி

காட்சிப்படம்

காட்சிப்படம்

6 பூச்சிக்கொல்லிகளை நிரந்தரமாகத் தடை செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில், அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை நிரந்தரமாகத் தடை செய்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே 60 நாட்களுக்குத் தடை செய்து தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்த நிலையில் தற்போது நிரந்தமாகத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை. இதைப் பயன்படுத்தப்படுவதால் அதிக நச்சு விளைவை ஏற்படுத்துகிறது.

இந்த பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

பூச்சிக் கொல்லி மருந்து குறித்து உயர்மட்டக் குழு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது. அதனடிப்படையில் குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read : எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பேசி பேஸ்புக்கில் நேரலை - இளைஞரை கைது செய்த காவல்துறை

அவை, மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ்,

அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ் சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் உள்ளிட்ட ஆறு பூச்சி கொல்லி மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Nadu government