ஹோம் /நியூஸ் /வணிகம் /

சீனா மீது அமெரிக்கா தொடுத்து வரும் வர்த்தகப் போர் இந்தியாவிற்கும் வருமா?

சீனா மீது அமெரிக்கா தொடுத்து வரும் வர்த்தகப் போர் இந்தியாவிற்கும் வருமா?

வர்த்தகப் போர் | அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போரால் விரைவில் ஆப்பிள் தயாரிக்கும் iPhone விலை 3 சதவீதம் வரை விலை உயர்த்தப்படலாம் என்று தகல்கள் கூறுகின்றன.

வர்த்தகப் போர் | அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போரால் விரைவில் ஆப்பிள் தயாரிக்கும் iPhone விலை 3 சதவீதம் வரை விலை உயர்த்தப்படலாம் என்று தகல்கள் கூறுகின்றன.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி 25 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

  2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25 சதவீதம் இறக்குமதி விதிக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் இறக்குமதி வரியை விதித்தது.

  அமெரிக்காவின் இந்த இறக்குமதி வரி உயர்வுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரியை உயர்த்தியது.

  இரு நாடுகளிடையிலான வர்த்தகப் போரால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் பாதிப்படைந்தன. பின்னர் இரண்டு நாடுகளும் வர்த்தகப் போரைத் தவிர்த்து மீண்டும் பழையபடி வர்த்தகம் செய்யலாம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால் சீன அரசு அமெரிக்காவிடம் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தையிலிருந்து சீனா வெளியேறியது.

  சீனா வெளியேறியதை அடுத்து 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா 25 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக அறிவித்தார். அதே போலவே அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியானது.

  மறுபக்கம், இரு நாடுகள் இடையிலான வர்த்தகப் போரால் இந்திய பங்குச்சந்தை பாதிப்படைந்தது. ஆனால் இது சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றம் தான். சீனாவை அடுத்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீதும் அமெரிக்க வர்த்தகப் போர் நடத்தும் என்று தகவல்கள் கூறுகின்றன.

  ஏற்கனவே இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்கள் மீது வரி உயர்த்துவோம் என்று சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இந்தியா அதைத் தள்ளிவைத்தது மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

  இந்நிலையில் இந்த வாரம் இந்தியா வந்த அமெரிக்க வர்த்தக துறை செயலாளர், இந்தியா சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தை மீறி இலவசமாகப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இது ஏற்புடையதல்ல என்று கடுமையாகச் சாடினார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா உடனான வர்த்தகம் பற்றிப் பேசும் போதெல்லாம், அமெரிக்க ஆட்டோமொபைல் பொருட்கள் மீது இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. அதைக் குறைக்க வேண்டும் கூறிவருகிறார்.

  இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இந்தியா அமெரிக்கப் பொருட்கள் மீது வரியை உயர்த்தாவிட்டாலும், அமெரிக்கா கண்டிப்பாக இந்தியப் பொருட்கள் மீது இறக்குமதி வரியை உயர்த்தும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.

  மேலும் பார்க்க:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: America, China, Export and Import Tax, Indian economy, Trade ware