ஹோம் /நியூஸ் /வணிகம் /

நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா!

நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா!

 ஜூன் 2022 வரையிலான நான்கு காலாண்டுகளில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளின் கொள்கைகளை கருவூலம் மதிப்பாய்வு செய்தது.

ஜூன் 2022 வரையிலான நான்கு காலாண்டுகளில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளின் கொள்கைகளை கருவூலம் மதிப்பாய்வு செய்தது.

ஜூன் 2022 வரையிலான நான்கு காலாண்டுகளில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளின் கொள்கைகளை கருவூலம் மதிப்பாய்வு செய்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வெள்ளியன்று அமெரிக்க கருவூலத் துறை, அதன் நாணய கண்காணிப்புப் பட்டியலிலிருந்து இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இந்தியாவையும் நீக்கியது.

புது தில்லியில் வெள்ளிக்கிழமை அமெரிக்க-இந்திய வணிகங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் நிகழ்வில் கருவூலச் செயலர் ஜேனட் யெலன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் உரையாற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் கருவூலத் துறை, அதன் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியுள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் ஏதேனும் வர்த்தக கொள்கை அல்லது நடவடிக்கை ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தால் அதன் நாணய நடைமுறைகள் மற்றும் மேக்ரோ பொருளாதாரக் கொள்கையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கும். அப்படியான இந்தப் நாணயக் கண்காணிப்புப் பட்டியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா இடம்பெற்றிருந்தது.

இதையும் படிங்க:  இந்தியாவில் 69 சதவீத குடும்பத்தினர்கள் நிதி பாதுகாப்பு இன்றி உள்ளனர் - ஆய்வில் தகவல்!

தற்போது சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகியவை ஏழு பொருளாதாரங்கள் நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருப்பதாக அமெரிக்க கருவூலத் துறை காங்கிரசுக்கு தனது இரு ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடுகள் தொடர்ச்சியாக நாட்டின் மூன்று வர்த்தக நிபந்தனைகளில் ஒன்றை மட்டுமே சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்நிய செலாவணி தலையீட்டை வெளியிடாதது மற்றும் அதன் செலாவணி விகித வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியவற்றால் சீனா இப்பட்டியலில் உள்ளது.

சுவிட்சர்லாந்து மீண்டும் மூன்று அளவுகோல்களுக்கான வரம்புகளை மீறி, "நாணயக் கையாளுபவர்" என்ற நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கிய சுவிட்சர்லாந்து நாட்டுடனான மேம்பட்ட இருதரப்பு ஈடுபாட்டு இனியும் தொடரும் என்று அமெரிக்க கருவூலத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:  கிரிப்டோகரன்சி மூலம் துபாயில் சொத்து வாங்கும் இந்தியர்களுக்கு சிக்கல்!

இந்த அறிக்கையில், ஜூன் 2022 வரையிலான நான்கு காலாண்டுகளில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளின் கொள்கைகளை கருவூலம் மதிப்பாய்வு செய்தது.

பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ளும் முக்கிய பொருளாதாரங்கள் அதற்கேற்ப வெவ்வேறு கொள்கைகளை பின்பற்றலாம், இது நாணய இயக்கங்களில் பிரதிபலிக்கும். உலகளாவிய பொருளாதார தலையீடுகளுக்கு வளரும் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் அணுகுமுறைகளின் வரம்பு சில சூழ்நிலைகளில் உத்தரவாதமளிக்கப்படலாம் என்பதை கருவூலம் அறிந்திருக்கிறது, என்று கருவூலர் கூறினார்.

கணிசமான இருதரப்பு வர்த்தக உபரியின் காரணமாக, அமெரிக்க கருவூலத் துறை இந்தியாவை நாணயக் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து (Currency Monitoring List) நீக்கி, நாணய கையாளுவோரின் கண்காணிப்புப் பட்டியலில் (Currency Manipulator watchlist ) தற்போது சேர்த்துள்ளது. தொற்றுநோய் காலம் தொடங்கியதிலிருந்து இந்தியா இப்பட்டியலில் இடம்பிடிப்பது இது மூன்றாவது முறையாகும்.

இதனால் அமெரிக்காவிற்கு இந்தியா மீதான பொருளாதார சந்தேகத்தன்மை நீக்கியுள்ளது உறுதி. மேலும் இந்த மாற்றத்தால் இந்திய - அமெரிக்க வணிகம் என்பது மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Published by:Ilakkiya GP
First published:

Tags: Currency Monitoring List, United States of America