• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இந்தியாவிற்கான வர்த்தக சலுகைகளை நிறுத்தும் அமெரிக்கா...! என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

இந்தியாவிற்கான வர்த்தக சலுகைகளை நிறுத்தும் அமெரிக்கா...! என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்தியாவின் ஜிடிபி குறைந்து வரும் நிலையில் புதியதாகப் பொறுப்பேற்கும் மோடி தலைமையிலான அரசுக்கு இது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் இந்தியப் பொருட்களுக்கு GSP (Generalized System of Preferences) கீழ் வரி சலுகை வழங்கப்படுகிறது. இந்த வரி சலுகையை ஜுன் 5-ம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அரசு முறைப்படி அறிவித்துள்ளது.

    வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், GSP ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தால், 4,800 பொருட்களை எந்த ஒரு வரியும் இல்லாமல் அங்கு இறக்குமதி செய்துகொள்ளலாம். இதுபோன்று இந்தியா உட்பட உலகின் பல்வேறு வளரும் மற்றும் ஏழை நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் அதிக பயன் அடைந்து வந்த நாடுகளில் ஒன்று இந்தியா. இந்நிலையில், இந்த சலுகையில் இருந்து இந்தியாவை ஜூன் 5-ம் தேதி முதல் ரத்து செய்ய உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அந்த ஒப்பந்தம் ரத்தானால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டு, விலை அதிகரிக்கும். எனவே அமெரிக்க இறக்குமதியாளர்கள் இந்தியாவை விட குறைந்த விலைக்குப் பொருட்களை அளிப்பவர்களை நாடிச் செல்வார்கள்.

    இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 190 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்படையும். இது இந்தியா மீது அமெரிக்க நடத்தும் ஒரு வகையான வர்த்தகப் போர் என்றும் கூறலாம்.

    ஏற்கனவே இந்தியாவின் ஜிடிபி குறைந்து வரும் நிலையில் புதியதாகப் பொறுப்பேற்கும் மோடி தலைமையிலான அரசுக்கு இது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: