Home /News /business /

ரஷிய மூலத்தை மறைக்க நடுக்கடல் வர்த்தகம் செய்த இந்தியா.. கவலை தெரிவித்த அமெரிக்கா

ரஷிய மூலத்தை மறைக்க நடுக்கடல் வர்த்தகம் செய்த இந்தியா.. கவலை தெரிவித்த அமெரிக்கா

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, பல மேற்கத்திய நாடுகள் மற்றும் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட ரஷ்ய சுத்திகரிப்பு நிறுவனங்களின் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, பல மேற்கத்திய நாடுகள் மற்றும் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட ரஷ்ய சுத்திகரிப்பு நிறுவனங்களின் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, பல மேற்கத்திய நாடுகள் மற்றும் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட ரஷ்ய சுத்திகரிப்பு நிறுவனங்களின் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பொருளாதாரத் தடையின் காரணமாக ரஷிய மூலத்தை மறைக்க நடுக்கடல் வர்த்தகம் செய்த இந்தியாவை எண்ணி அமெரிக்கா கவலை கொள்வதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தெரிவித்தார்.

2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக ரஷ்யா மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள், காய்ச்சி-வடிகட்டிகள், நிலக்கரி மற்றும் எரிவாயு உள்ளிட்ட ரஷ்யாவைச் சேர்ந்த எரிசக்தி பொருட்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதைத் தடை செய்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி நியூயார்க்கிற்கு ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளை, அதன் மூலத்தை மறைப்பதற்காக நடுக்கடல் பரிமாற்றங்கள் மூலம் ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா இந்திய மீதான கவலையை தெரிவித்ததாக இந்திய மத்திய வங்கியின் உயர்மட்ட வங்கியாளர் ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி

உலகின் எண்ணெய் இறக்குமதியில் 3வது இடத்தில் உள்ள இந்தியா, கடந்த காலங்களில் ரஷ்ய எண்ணெயை அரிதாகவே வாங்கியுள்ளது. ஆனால் போர் தொடங்கியதில் இருந்து, பல மேற்கத்திய நாடுகள் மற்றும் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட ரஷ்ய சுத்திகரிப்பு நிறுவனங்களின் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது.

அப்படி வாங்கும் கச்சா எண்ணையை சுத்திகரித்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போதுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக ரஷிய மூலத்தைக் கொண்ட பொருள்களின் மூல விபரங்களை மறைக்கும் யுத்திகளை கையாண்டு வருகிறது.

அமெரிக்கக் கருவூலத் துறை இந்தியாவிடம், இந்தியக் கப்பல் ஒன்று ரஷ்ய டேங்கரில் இருந்து கச்சா எண்ணையை எடுத்துக்கொண்டு மேற்குக் கடற்கரையில் உள்ள குஜராத் துறைமுகத்துக்குக் கொண்டு வந்து சுத்திகரித்து அமெரிக்காவிற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா தெரிவித்தார்.

சுதந்திர தினத்திற்காக வெளியிடப்படும் மெய்நிகர் 3டி தபால்தலைகள்

புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இது குறித்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளது.

பத்ராவின் கருத்துக்கள், இத்தகைய அமெரிக்க கவலைகள் பற்றிய இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். மேலும்
ரஷ்ய கச்சா எண்ணெய் பதப்படுத்தப்பட்டு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளாக மாற்றப்பட்டதாக பத்ரா கூறினார். ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் இந்தியா உடன்படவில்லை. மாஸ்க்கோவின் செயலுக்கு ஆதரவும் அளிக்கவில்லை.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Crude oil, India, Russia, Russia - Ukraine, Trade

அடுத்த செய்தி