• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா, சவுதியைப் பின்னுக்குத் தள்ளும் அமெரிக்கா!

கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா, சவுதியைப் பின்னுக்குத் தள்ளும் அமெரிக்கா!

கச்சா எண்ணெய் சேகரிப்பு

கச்சா எண்ணெய் சேகரிப்பு

2019-ம் ஆண்டில் அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைச் செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா இலக்காக வைத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    2025-ம் ஆண்டுக் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதல் இடத்த பிடிக்கும் என்றும் ரைஸ்டாண்ட் எனர்ஜி கன்சல்டன்ஸி தெரிவித்துள்ளது.

    அடுத்த 6 ஆண்டில் ஒரு நாளுக்கு 24 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அமெரிக்கா செய்யும் என்றும், பேரல் 58 டாலர் என விற்கப்படும் என்றும் ரைஸ்டாண்ட் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் டெக்சாஸ், நியூ மெக்சிகோ ஆகிய மாகானங்களில் கச்சா எண்ணெய் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    2019-ம் ஆண்டில் அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைச் செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா இலக்காக வைத்துள்ளது.

    இந்த நிலை தொடரும் போது 2025-ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா, சவுதி அரேபியாவைப் பின் தள்ளி முதல் இடத்தை அமெரிக்கா பிடிக்கும்.

    வரும் ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்தால் இந்த நிலையில் அமெரிக்கப் பின்தங்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: 10.50 லட்சம் பேருக்கு வேலை... உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் அறிவிப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: