ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடையை நீக்கிய ட்ரம்ப்!

ஜி-20 மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும் சந்தித்து வர்த்தகப் போர் குறித்து உரையாடினர்.

news18
Updated: July 2, 2019, 9:10 AM IST
ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடையை நீக்கிய ட்ரம்ப்!
ஹூவாய்
news18
Updated: July 2, 2019, 9:10 AM IST
சீனாவுடனான வர்த்தகப் போர் நடைபெற்று வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகத்தை தொடரலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில வாரங்கள் முன்பு ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகத் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனால் விரைவில் கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் ஹூவாய் போன்களில் செயல்படாது என கூறப்பட்டது.

இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பிற்குப் பிறகு ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் தொடர்பு வைத்துக்கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்குவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


ஜி-20 மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும் சந்தித்து வர்த்தகப் போர் குறித்து உரையாடினர்.

அந்த சந்திப்பின் எதிரொலியாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி சீன பொருட்கள் மீது புதிய வரி விதிப்புகள் ஏதுமிருக்காது என்று ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:

Loading...

First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...